- Advertisement -
Homeபொழுதுபோக்குபிடிக்காத கதையில் வற்புறுத்தியதால் நடித்த அஜீத்குமார், அது அவர் நடிக்க வேண்டிய கதையே அல்ல என...

பிடிக்காத கதையில் வற்புறுத்தியதால் நடித்த அஜீத்குமார், அது அவர் நடிக்க வேண்டிய கதையே அல்ல என இப்போது புலம்பும் டைரக்டர் – அது இந்த படமா?

- Advertisement -

ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிப்பது படத்தின் இயக்குநரோ, நடிகரோ அல்ல. படத்தின் கதைதான். ரசிகர்கள் விரும்பும் ஒரு கதையை, சுவாரசியமான திரைக்கதையாக மாற்றி, விஷூவலாக தரும்போது மட்டுமே அந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும். மிகப்பெரிய வெற்றி படமாகவும் அமையும்.

ஒரு காலகட்டத்தில் சில இயக்குநர்கள் சிறந்த படங்களை தருவார்கள். அது பல ஆண்டுகளுக்கு ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக இருக்கும். அப்படிப்பட்ட படங்கள்தான் அடிக்கடி டிவி சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. முத்து, பாட்ஷா, வடெசன்னை, புதுப்பேட்டை போன்ற படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட்டு, ரசிகர்களால் மீண்டும் வரவேற்பை பெறுகின்றன.

- Advertisement -

அதனால் கதையை கேட்டுவிட்டுதான் படத்தில் நடிக்கவே ஹீரோ நடிகர்கள் சம்மதம் தெரிவிப்பர். கதை ஒரு வரியிலேயே பிடித்து போய்விட்டால், கதையை டெவலப் பண்ணிட்டு வாங்க, என ரஜினி போன்றவர்கள் சொல்லி விடுகின்றனர். படத்தின் கதையை முழுமையாக கேட்ட பிறகு, இதே மாதிரி படத்தில் கொண்டு வந்து விடுவீர்களா, அல்லது ஏதேனும் சொதப்பி விடுவீர்களா என்றும் சில ஹீரோக்கள் கேட்பது வழக்கம். ஏனெனில் கதை சொன்ன மாதிரி படம் எடுக்க தெரியாத சில இயக்குநர்களும் இருக்கவே செய்கின்றனர்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குநர் லிங்குசாமி, விஜய் ஒரு படத்தின் கதையை கேட்காமலேயே எனக்கு கதை பிடிக்கவில்லை என்று மறுத்துவிட்டார் என்று ஒரு பரபரப்பான தகவலை கூறினார். அதன்பிறகு அவர் சண்டைக்கோழி படத்தை எடுத்ததாகவும் தெரிவித்தார். அது மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.

- Advertisement -

இதே போல் மற்றொரு தகவலை இப்போது டைரக்டர் லிங்குசாமி கூறியிருக்கிறார். அதாவது அஜீத், திரிஷா நடிப்பில் வெளிவந்த படம் ஜி. இந்த படம் அஜீத்குமாருக்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. இந்த படத்தின் கதையை ஷூட்டிங் போவதற்கு முந்தைய நாள்தான் அஜீத்குமார் கேட்டார். கேட்ட போதே, இந்த கதை எனக்கு பிடிக்கவில்லை என்று வெளிப்படையாக கூறிவிட்டார்.

ஆனால் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் என்னுடன் இருந்த சிலரும் அவரிடம் பேசி சமாதானப்படுத்தி, இந்த படம் நிச்சயமாக நல்ல படமாக அமையும் என்று கூறி அவரை சம்மதிக்க வைத்தனர். நான் ஜி படத்தில் நடிக்க வேண்டும் என நினைத்தது மாதவன் அல்லது சித்தார்த் தான்.எனக்கும் இந்த கதையில் அஜீத் செட் ஆவாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனாலும் வற்புறுத்தலால் கதை பிடிக்கா போதும் அந்த படத்தில் அஜீத் நடித்தார். அவர் சொன்னது போலவே, படம் வரவேற்பை பெறவில்லை, என்று கூறியிருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி

- Advertisement -

சற்று முன்