- Advertisement -
Homeபொழுதுபோக்குஏகேவின் அடுத்த படத்தை இயக்கப் போவது புஷ்பா பட இயக்குனர் சுகுமாரன், இணையத்தில் தீயாக பரவிய...

ஏகேவின் அடுத்த படத்தை இயக்கப் போவது புஷ்பா பட இயக்குனர் சுகுமாரன், இணையத்தில் தீயாக பரவிய தகவல் – அஜீத்குமாரின் மேலாளர் தந்த விளக்கம்!

- Advertisement -

விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களை முடித்துவிட்டு நடிகர் அஜீத்குமார் கடந்த 4 மாதங்களாக கார் ரேஸில் கலந்துக் கொண்டுளளார். அஜீத்குமார் கார் ரேஸிங் என்ற அணியின் தலைவராக அவர் தொடர்ந்து கார் ரேஸில் தனது குழுவினருடன் பங்கேற்று வெற்றிகளை பெற்று வருகிறார். வரும் அக்டோபர் வரை கார் கார் நீடிக்கிறது.

இந்த சூழலில் நடிகர் அஜீத்குமார் நடிக்கும் அடுத்த படம் என்ன யார் டைரக்டர், யார் தயாரிப்பாளர் என்ற கேள்வி இருந்து வருகிறது. குட் பேட் அக்லி பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றிருப்பதால் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜீத்குமார் தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் தனுஷூம் நடிகர் அஜீத்குமாரிடம் கதை சொல்லி இருக்கிறார். கதை ரொம்பவும் பிடித்துப் போனதால் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க என்று அவரிடம் அஜீத்குமார் கூறியிருக்கிறார். வரும் ஜூலையில் இருவரும் நேரில் சந்தித்து கதை குறித்து விவாதிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவர்களை தவிர சிறுத்தை சிவா வெங்கட்பிரபு விஷ்ணுவர்தன் லோகேஷ் கனகராஜ் மகிழ்திருமேனி என பலரது பெயர்கள் அஜீத்குமாரின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்கள் லிஸ்ட்டில் இருந்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக புஷ்பா பட இயக்குனர் சுகுமாரன் தான், அஜீத்குமாரின் அடுத்த படத்தை இயக்குகிறார் என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

- Advertisement -

ஏனெனில் புஷ்பா புஷ்பா 2 படங்களில் மாபெரும் வெற்றிக்கு பிறகு அட்லி இயக்கும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் அல்லு அர்ஷூன் நடிக்கிறார். திரிவிக்ரம் இயக்கும் படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார். அவர் 2 படங்களிலும் மாறி மாறி நடிக்க உள்ள நிலையில், அஜீத்குமார் படத்தை இயக்க இயக்குனர் சுகுமாரன் தயாராகி விட்டார். ஸ்கிரிப்ட் ஒர்க் வேகமாக நடக்கிறது என தகவல் பரவியது.

இதையடுத்து நடிகர் அஜீத்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா இதுகுறித்து ஒரு பதிவை செய்துள்ளார். அதில் அஜீத்குமார் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கப் போவது சுகுமாரன் என்ற தகவல் எவ்வித அடிப்படையும் இல்லாத தவறான தகவல். அப்படிப்பட்ட எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. இதுபோன்ற பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்று கூறியிருக்கிறார். அதே நேரத்தில் சுகுமாரன் போன்ற ஒரு இயக்குனர் படத்தில் அஜீத்குமார் போன்ற நடிகர்கள் நடிப்பது மிகவும் கடினம் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்