நடிகர் ரஜினிகாந்த் இதுவரை 171 படங்களில் நடித்து அந்த படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கின்றன. இப்போது அவரது 172 படம் ஜெயிலர் 2 ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து தனது 173வது படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இந்த படத்தை ரஜினியின் நண்பர் கமல்ஹாசனே தயாரிக்கிறார்.
அதன்பிறகு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடிக்கும் ஒரு புதிய படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் பான் இந்தியா படமாக தயாரிக்க உள்ளது. இந்த படத்தை முதலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்த நிலையில் இப்போது அந்த வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அவ்வப்போது தனக்கு விருப்பமான படங்களை தேர்வு செய்து நடிப்பார். சில படங்களை அவரே தயாரிப்பார். சில படங்களுக்கு அவரே கதை ரெடி செய்வார். அப்படி தான் வள்ளி அருணாசலம் பாபா படையப்பா போன்ற படங்கள் உருவாகின. இதில் பாபா தவிர வள்ளி மற்றும் அருணாசலம் படையப்பா போன்ற படங்கள் மாபெரும் வெற்றிப் படங்களாக இருந்தன.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1999ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியை வரவேற்பை பெற்ற படம் படையப்பா. படத்தின் கதை திரைக்கதையை ரஜினி எழுதி அவரே சொந்தமாகவும் தயாரித்திருந்தார். இந்த படத்தை கேஎஸ் ரவிக்குமார் டைரக்ட் செய்ததார். இந்த படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரஜினிக்கு அப்பாவாக நடித்திருந்தார்.
தனது 50 ஆண்டு சினிமா பயணத்தில் பொன்விழா கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆண்டில் படையப்பா படத்தை ரி ரிலீஸ் செய்தார். 26 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த படம் மாபெரும் வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் படையப்பாவை பழிவாங்க மீண்டும் அடுத்த ஜென்மத்தில் வருவேன் என்று நீலாம்பரி கூறுவது போன்ற காட்சி இருந்தது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா கூறியதாவது, படையப்பா பாகம் 2 படத்தின் முழுக்கதையை அப்பா ஏற்கனவே எழுதி முடித்துவிட்டார். அந்த கதை மிகச் சிறப்பாக வந்துள்ளது. ஆனால் அந்தப் படத்தை இயக்கும் இயக்குனர் யார், எப்போது படப்பிடிப்பு துவங்கும் என்பது மட்டும் இன்னும் முடிவு செய்யவில்லை என்று சௌந்தர்யா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





