- Advertisement -
Homeபொழுதுபோக்குபொங்கல் பண்டிகைக்கு இந்த படமும் களத்தில் இறங்குகிறதா? - ஜனவரி 31ம் தேதிக்குள் படப்பிடிப்பை முடித்துவிட...

பொங்கல் பண்டிகைக்கு இந்த படமும் களத்தில் இறங்குகிறதா? – ஜனவரி 31ம் தேதிக்குள் படப்பிடிப்பை முடித்துவிட ஹீரோ ஸ்ட்ரிக்டா ஆர்டர் போட்டுட்டாராம்

- Advertisement -

வரும் பொங்கல் பண்டிகைக்கு களத்தில் இறங்க தயாராக ஐந்து படங்கள் இருக்கின்றன. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படம், பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படுகிறது. இதில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இதில் விக்ராந்த், விஷ்ணு விஷால் நடித்திருக்கின்றனர். கிரிக்கெட்டை மையப்படுத்திய கதையாக இது எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அடுத்து இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படமும், நீண்டகால எதிர்பார்ப்பில் உள்ள படமாக, பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அடுத்து பா. ரஞ்சித் இயக்கத்தில், சியான் விக்ரம் நடித்த தங்கலான் படமும், பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிறது என்ற தகவலும் கிடைத்திருக்கிறது.

- Advertisement -

இதுமட்டுமின்றி, டைரக்டர் பாலா இயக்கத்தில்அருண்விஜய் நடித்த வணங்கான் படமும், கார்த்தி நடித்த ஜப்பான் படமும் பொங்கலன்று ரிலீஸ் ஆகிறது. ஐந்து படங்கள் ரிலீஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், இப்போது அஜீத் குமார் நடித்துவரும் விடாமுயற்சி படத்தையும், பொங்கல் அன்று திரைக்கு வர ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன.

துணிவு படத்துக்கு பிறகு, நீண்ட தாமதம் ஏற்பட்ட நிலையில், இம்மாதம் 4ம் தேதி தான் விடாமுயற்சி படக்குழு, அஜர்பைஜான் புறப்பட்டுச் சென்றது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜீத்குமார் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துவருவதாக தெரிகிறது. அஜீத்குமாருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இந்த படத்தில், பிரதான வில்லனாக ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடிக்கிறார்.

- Advertisement -

இதற்கிடையே, அஜீத்குமார் வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் படப்பிடிப்பை முழுமையாக முடித்து விடுமாறு, படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரிடம் கண்டிப்பாக தெரிவித்து இருக்கிறார். அதாவது, பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி ரிலீஸ் ஆக வேண்டும் என்றும் ஸ்ட்ரிக்டாக கூறியிருக்கிறார். இதையடுத்த, போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளும், ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

அஜர்பைஜானில், ஷூட்டிங்கை முடித்துவிட்டு துபாய் செல்ல இருந்த நிலையில், முழு படத்தையும் அஜர்பைஜானிலேயே முடித்து விடுங்கள் என்றும் அஜீத் வலியுறுத்தி இருக்கிறார். இதையடுத்து, முழு படமும் அங்கேயே எடுக்கப்படுகிறது. வெங்கட் பிரபு எடுத்து வரும் விஜய் 68 படமும், வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் உள்ள நிலையில், வாரிசு – துணிவு போலவே, விடா முயற்சி – விஜய் 68 படங்களும் பொங்கல் பண்டிகைக்கு மோதுகின்றன.

- Advertisement -

சற்று முன்