- Advertisement -
Homeபொழுதுபோக்குஅமர்க்களம் பாடல் பின்னணியில் ஒலிக்க, கேக் வெட்டி கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி... இணையத்தில்...

அமர்க்களம் பாடல் பின்னணியில் ஒலிக்க, கேக் வெட்டி கொண்டாடிய அஜித் – ஷாலினி தம்பதி… இணையத்தில் வைரலாகும் வீடியோ…

- Advertisement -

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இதன் சூட்டிங் நடைபெற்று வருகிறது. படத்தை முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டிலேயே இயக்குனர் மகிழ்திருமேனி எடுத்து வருகிறார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில், திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் சூட்டிங் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு ஜூன் மாதத்தில் அஜித்தின் அடுத்த திரைப்படத்திற்கான சூட்டிங் தொடங்குகிறது.

- Advertisement -

இதனை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா, மார்க் ஆண்டனி படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் எடுக்கிறார். இதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. அதில் படத்திற்கு, குட் பேட் அக்லி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதனிடையே சமீபத்தில் நடிகர் அஜித், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை அறிந்த அவரது ரசிகர்கள் பதறிப் போயினர்.

- Advertisement -

காதுக்கு அருகே மூளைக்குச் செல்லும் நரம்பு மண்டலத்தில் வீக்கம் இருந்ததால், அது தொடர்பான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவியுடன் அவர் கேக் வெட்டி மகிழ்ந்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இருவருக்கும் கடந்த 2000 ஆண்டில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளன. அப்படியான சூழலில் இவர்களின் இந்த வீடியோவை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதில் தம்பதியர் கேக் வெட்டும் போது பின்னால் அமர்க்களம் படத்தில் இடம்பெற்ற உன்னோடு வாழாத வாழ்வு பாடல் ஒலிக்கப்படுவதை பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்