- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமார் படத்தின் சாதனையை முறியடித்த தனுஷ் படம், தமிழகத்தில் மட்டும் முதல் நாள் வசூல் எம்பூட்டு...

அஜீத்குமார் படத்தின் சாதனையை முறியடித்த தனுஷ் படம், தமிழகத்தில் மட்டும் முதல் நாள் வசூல் எம்பூட்டு தெரியுமா? – அட்ரா சக்க… ராயன் ரவுண்டு கட்டி அடிச்சிருக்காரே?

- Advertisement -

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் ராயன். இது அவரது 50வது படம். இந்த படத்தில் தனுஷ் காத்தவராயன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அவரது தம்பிகளாக சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், தங்கையாக துஷாரா விஜயன் நடித்துள்ளனர். மேலும் போலீஸ் அதிகாரியாக பிரகாஷ் ராஜ், வில்லன் கேரக்டர்களில் எஸ்ஜே சூர்யா, சரவணன் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். அடங்காத மனுஷன் தான் பாடல், பெரிய அளவில் டிரண்டிங் ஆகியிருக்கிறது. படத்தின் மற்றொரு ஹீரோ ஏஆர் ரகுமான்தான் என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். படத்தின் சண்டை காட்சிகளும், இசையும்தான் படத்தை தூக்கி நிறுத்தியிருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

படத்தின் முதல் பாதி அளவுக்கு, இரண்டாம் பாதியில் தனுஷ் கவனம் செலுத்தவில்லை. இந்த படம் செல்வராகவன் ஸ்டைலில் இல்லை என்றாலும், வெற்றிமாறன் படம் போல தான் இருக்கிறது. குறிப்பாக இந்த படத்தை வடசென்னை 2ம் பாகம் போல தனுஷ் எடுத்திருப்பதாகவும் விமர்சகர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது. ஆனால் படத்துக்கு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

சமீபத்தில் வெளியான படங்களில் அரண்மனை 4, கருடன், மகாராஜா படங்களுக்கு பிறகு ரசிகர்களின் கவனம் பெற்ற படமாக ராயன் இருப்பதை மறுக்க முடியாது. இந்தியன் 2 படம் பார்த்து நொந்து போன ரசிகர்களுக்கு, ராயன் படம் பல விதங்களில் ஒருவித திருப்தியை அளித்திருப்பதாகவே கூறப்படுகிறது. இரண்டாம் நாளான இன்றும் பெரும்பாலான தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ராயன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில், ராயன் படம் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் உலகம் முழுவதும் ராயன் படத்தின் முதல் நாள் வசூல், 17.5 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் நேற்று ஒருநாளில் வசூல் 10.2 கோடி ரூபாய் என்று தெரிய வந்துள்ளது. தனுஷ் நடித்த படத்துக்கு முதல் நாள் வசூல் இந்தளவுக்கு இருப்பது முதன்முறையாக ராயன் படத்துக்கு மட்டும்தான்.

அதே வேளையில், நடிகர் அஜீத்குமார் நடித்த பில்லா 2 படத்துக்கு முதல் நாள் வசூலாக ரூ. 10.1 கோடி தமிழ்நாட்டில் மட்டுமே வசூலாகி உள்ளது. ஆகவே அஜீத்குமார் நடித்த பில்லா 2 படத்தை விட கூடுதலாக தமிழ்நாட்டில் ரூ. 10 லட்சம் கூடுதலாக வசூலித்து முதல் நாள் வசூலில் அஜீத்குமார் பட சாதனையை, தனுஷ் படம் முறியடித்துள்ளது. இந்த தகவலால், தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்