- Advertisement -
Homeபொழுதுபோக்குகண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா... அஜித் ரசிகர்களுக்கு இந்த வருடத்தில் இனிப்பான முதல் செய்தி...

கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா… அஜித் ரசிகர்களுக்கு இந்த வருடத்தில் இனிப்பான முதல் செய்தி…

- Advertisement -

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக, விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். தடையற தாக்க, மீகாமன், தடம், கலகத்தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய, மகிழ் திருமேனி இந்தப் படத்தை எடுத்து வருகிறார். லைக்கா நிறுவனம் இதனை தயாரிக்கிறது. அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தப் படத்திற்கான அறிவிப்பு மே மாதமே வெளியிடப்பட்டது. ஆனால் அடுத்த கட்ட பணிகள் நடைபெறுவதில் தொடர்ந்து தாமதம் நீடித்து வந்த நிலையில், அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, பிக் பாஸ் புகழ் ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளிலேயே படம் எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக அஜர்பைஜான் நாட்டில் மட்டும் 70% படப்பிடிப்புகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. க்ரைம் த்ரில்லர் பாணியில் இந்த திரைப்படம் உருவாக இருக்கிறதாம். சமீபத்தில் அங்கு, பயங்கரமான கார் சேஸிங் காட்சிகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த திரைப்படத்தின், ஓடிடி உரிமையை netflix நிறுவனம் பெற்றுள்ளது.

கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கு விடாமுயற்சி திரைப்படத்தை அந்த நிறுவனம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. திரையரங்குகளில் வெளியான பிறகு, இந்த திரைப்படம் தங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று netflix அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கிறார்.

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகிரா ஆகிய திரைப்படங்களை அவர் இயக்கி இருந்தார். இதனை தொடர்ந்து விஷாலை வைத்து மார்க் ஆண்டனி எனும் படத்தை அவர் இயக்கினார். யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. இந்த நிலையில் தன்னை எப்போதும் வெளியில் அஜித் ரசிகராக காட்டிக் கொள்ளும் ஆதிக், இப்போது அஜித்தை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

இந்த திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்திரி தயாரிக்கிறது. இந்த படத்திற்காக, அஜித் குமார் 165 கோடி ரூபாய் சம்பளம் வாங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விடாமுயற்சி திரைப்படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் திரைப்படமும் இந்த வருடத்திற்குள் ரிலீஸ் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இதனால் ஒரே ஆண்டில் அஜித்திற்கு இரண்டு திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக பலரும் பேசி வருகின்றனர்.

சற்று முன்