- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி திரைப்படத்தின் கதை இதுதான்... வெளியான புதிய தகவல்... அட கேட்கும் போதே சுவாரஸ்யமா இருக்குதே...

விடாமுயற்சி திரைப்படத்தின் கதை இதுதான்… வெளியான புதிய தகவல்… அட கேட்கும் போதே சுவாரஸ்யமா இருக்குதே…

- Advertisement -

நடிகர் அஜித்தின் 62 ஆவது திரைப்படமாக விடாமுயற்சி உருவாகி வருகிறது. இதில், திரிஷா அர்ஜூன் ஆரவ் ரெஜினா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தடம், தடையறத் தாக்க, மீகாமன் உள்ளிட்ட திரைப்படங்களை எடுத்த மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தை இயக்கி வருகிறார்.

இதற்கான சூட்டிங் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. அப்போது முதல் முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டிலேயே இதன் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் அஜித் கலந்து கொண்ட புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தின.

- Advertisement -

ஆனால் இந்த திரைப்படம் குறித்து, அடுத்த கட்ட அப்டேட்டை வெளியிடாமலேயே இருக்கிறது லைக்கா நிறுவனம். கடந்த ஆண்டு மே ஒன்றாம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு, விடாமுயற்சியின் டைட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் சரி அதற்குப் பிறகு படத்திற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போலவே தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

இப்படியான சூழலில், அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது. அதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதாகவும், படத்திற்கு குட் பேட் அக்லி என பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கும் சூழலில் விடாமுயற்சி என்னதான் ஆனது என்று கேள்வியும் ஒரு பக்கம் எழ ஆரம்பித்தது.

- Advertisement -

இப்படியான சூழலில் அஜித்தின் மேலாளர் ஆன சுரேஷ் சந்திரா விடாமுயற்சி திரைப்படத்திலிருந்து ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அஜித் மற்றும் ஆரோ செல்லும் கார் விபத்திற்கு உள்ளாகும் காட்சி வெளியாகி பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது போன்ற ரிஸ்கில் இனி அஜித் ஈடுபட வேண்டாம் என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர்.

இந்த நிலையில் விடா முயற்சி திரைப்படம் 1997 ஆம் ஆண்டு வெளியான பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவல் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது காரில், ஒரு தம்பதியர் செல்லும்போது கைவிடப்பட்ட ஒரு பகுதியில் வாகனம் பழுதாகி விடுவதாகவும், அப்போது அவரது மனைவி காணாமல் போக, அவரைக் கண்டுபிடிக்க செல்லும் போது பல்வேறு குற்றங்கள் அவிழ்க்கப்படுவதாகவும் அந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கும். இதை தழுவி தான் விடாமுயற்சியை மகிழ்திருமேனி எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிறகு இதன் சூட்டிங் மீண்டும் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்