நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவரது முந்தைய திரைப்படமான துணிவு திரைப்படத்தின் போதே, அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருந்தது. ஆனால் இயக்குனர் மட்டும் தயாரிப்பு நிறுவனத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
இதன்பிறகு மகிழ்திருமேனி ப்ராஜெக்ட்டிற்குள் வந்தார். கடந்த ஆண்டு அஜித் பிறந்த நாள் மே 1ம் தேதி இது குறித்து அறிவிப்பு வெளியானது. படத்திற்கும் விடாமுயற்சி என பெயர் வைக்கப்பட்டது. ஆனால் இதன் சூட்டிங் பணிகளும், அடுத்தடுத்து அப்டேட்களும் வெளியாகாமல் தாமதம் ஆகின. இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டின் விடாமுயற்சி தொடர்பிற்கான சூட்டிங் தொடங்கியது.
தற்போது முழு வீச்சில் அதற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, பிக் பாஸ் புகழ் ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். க்ரைம் திரில்லர் ஜானரில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பில் அஜித் எடுத்த புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகின. இருப்பினும் படத்தின் குறித்த அடுத்த கட்ட அப்டேட் குறித்து தயாரிப்பு நிறுவனம் எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் இருந்து வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க அஜித்தின் அடுத்த படத்தை, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார். கடைசியாக அவர் இயக்கத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது.
இந்த நிலையில் தன்னை எப்போதும் அஜித் ரசிகராகவே காட்டிக் கொள்ளும் அவர், தற்போது அவரை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். தெலுங்கில் புகழ்பெற்ற மைத்திரி நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இதற்கான கதை எழுதும் பணியில் ஆதிக் ரவிச்சந்திரன் ஈடுபட்டு வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு அவர் அடுத்ததாக, விஷ்ணு வர்தனுடன் இணையப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இவர் அஜித்தை வைத்து பில்லா மற்றும் ஆரம்பம் என இரண்டு வெற்றி திரைப்படங்களை இயக்கினார். தற்போது பாலிவுட் உலகிற்கு சென்றுள்ள விஷ்ணுவர்தன், ஷெர்ஷா இன்னும் திரைப்படத்தை இயக்கி பலரையும் கவனிக்க வைத்தார். கார்கில் போரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், தேசிய விருதையும் பெற்றது. இப்படியான சூழலில்தான் அஜித் அவருடன் இணைய போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





