கடந்த ஆண்டு பொங்கலுக்கு அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியானது. ஹெச் வினோத் இயக்கியிருந்த இந்த திரைப்படம், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. இதன்பிறகு விடா முயற்சி திரைப்படத்தில் நடிக்க அஜித்குமார் கமிட் ஆனார். இந்தத் திரைப்படம், வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அஜித் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான இறுதி கட்ட பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார் படத்தின் இயக்குனரான மகிழ் திருமேனி. இடையே ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டி இருந்த நிலையில் அதனை தற்போது முடித்துள்ளனர்.
இது தொடர்பான புகைப்படம் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது. அதில் கோட் சூட்டுடன் மாஸாக காட்சியளித்தார் அஜித்குமார். திரிஷா மற்றும் அஜித் குமாருக்கு இடையே ஆன காட்சிகள் அந்த பாடலில் இடம் பெற்றிருந்தன. படத்தில் அஜித்குமாருக்கு மனைவியாக திரிஷா நடித்திருக்கிறார்.
விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அதற்கு ஒரு படி மேலே பேசப்பட்டு வருகிறது குட் பேட் அக்லி திரைப்படம். இதுவரை அஜித் ஏற்காத வித்தியாசமான கேரக்டரை அவருக்கு இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதிலும் த்ரிஷா தான் கதாநாயகி. இதுபோக தெலுங்கு நடிகர் சுனில், நடிகர்கள் பிரசன்னா அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்று இருக்கிறார்கள். ஹைதராபாத்தில் தொடங்கிய படப்பிடிப்பு, ஸ்பெயின் தாய்லாந்து உள்ளிட்ட நகரங்களில் எடுக்கப்பட்டது. இதுதான் முதலில் பொங்கலுக்கு வெளியாவதாக இருந்தது. தற்போது பணிகள் அதிகம் இருப்பதால், குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி தள்ளிப் போய் இருக்கிறது.
இந்த இரண்டு திரைப்படங்களை தொடர்ந்து சிறிது காலம் கார் பந்தயத்தில் அஜித் குமார் கவனம் செலுத்த இருக்கிறார். அதன் பிறகு அவரது 64ஆவது திரைப்படம் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனை, வெங்கட் பிரபு இயக்குவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். ஏற்கனவே இந்தக் கூட்டணி மங்காத்தா என்னும் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தது. ஒருவேளை அதன் இரண்டாம் பாகத்தைதான் வெங்கட் பிரபு இயக்க உள்ளாரா என்ற கேள்வியும் தற்போது எழுந்திருக்கிறது.





