- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித்தோட அடுத்த படத்திற்கு இவர்தான் இயக்குனரா... ம்ம்... ஏ.கே., ஓகே சொல்றதுக்கு முன்னால கொஞ்சம் யோசிச்சுருக்கலாமோ...

அஜித்தோட அடுத்த படத்திற்கு இவர்தான் இயக்குனரா… ம்ம்… ஏ.கே., ஓகே சொல்றதுக்கு முன்னால கொஞ்சம் யோசிச்சுருக்கலாமோ…

- Advertisement -

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இதனை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. முதலில், அஜித் படத்தை விக்னேஷ் சிவன்தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்துடன் அவருக்கு ஏற்பட்ட மன கசப்பால், படத்தில் இருந்து அவர் விலகினார்.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனி ப்ராஜெக்டிற்குள் வந்தார். அஜித் பிறந்தநாள் ஆனா மே ஒன்றாம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, விடாமுயற்சி டைட்டிலும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு படத்திற்கான எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமலே இருந்தது.

- Advertisement -

பைக் டூர் மீது ஆர்வம் செலுத்தும் அஜித், வெளிநாடுகளுக்கு பறந்ததால் சூட்டிங் நடைபெறுவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்பட்டது. படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் ஆகியும் அடுத்த கட்ட தகவல் வெளியாகாததால், அஜித் ரசிகர்கள் சோர்வடைந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய வகையில் விடாமுயற்சியின் சூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது.

அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில், அஜித் பங்கேற்று உள்ளார். இதுபோக நடிகை திரிஷா, ரெஜினா, சஞ்சய் தத், ஆரவ் உள்ளிட்டோரும் படத்தில் உள்ளனர். க்ரைம் த்ரில்லர் ஜானரில் இந்தப் படம் உருவாகிறது. இதில் அஜித் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் அஜித் அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திரிஷா இல்லனா நயன்தாரா என்னும் தெரிய படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஆதிக், தனது முதல் திரைப்படத்தையே சர்ச்சைக்கு உள்ளதாக எடுத்து பரபரப்பாக பேசப்பட்டார். இதன் பிறகு அவர் இயக்கிய அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா ஆகிய திரைப்படங்கள் தோல்வியை தழுவின. இதையடுத்து விஷால், எஸ்.ஜே.சூர்யாவுடன் அவர் இணைந்து மார்க் ஆண்டனி படத்தை எடுத்தார்.

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் அள்ளியது. இந்த நிலையில் தன்னை எப்போதும் அஜித் ரசிகராக காட்டிக் கொள்ளும் ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்ததாக அஜித்குமாரை வைத்து இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை விடுதலை திரைப்படத்தை தயாரித்த எல்ரட்குமார் எடுக்க இருக்கிறார். இந்த படத்திற்காக அஜித்திற்கு அதிகபட்சமாக 150 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்