அஜித் குமார் தற்போது ஒரு சேர இரண்டு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் நாம் ஏற்கனவே அறிந்தது தான். இதில் விடாமுயற்சி திரைப்படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டிலேயே இது படமாக்கப்பட்டு வருகிறது.
படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இதுபோக அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கிட்டதட்ட விடாமுயற்சி திரைப்படத்தின் பணிகள் 90 சதவீதம் நிறைவு செய்துவிட்டன.
மீதமுள்ள 10 சதவீத பணிகளை மட்டுமே மேற்கொள்வதற்கு, காலம் எடுத்துள்ளதாக இயக்குனர் மகில் திருமேனி தெரிவித்திருந்தார். இப்படியான சூழலில் தனது அடுத்த திரைப்படத்திலும் கமிட் ஆனார் அஜித்குமார். தான் வெளியில் எங்கு சென்றாலும் தன்னை அஜித்குமார் ரசிகராகவே காட்டிக் கொள்ளும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.
இவர் இதற்கு முன்பாக, திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா, மார்க் ஆண்டனி ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார். தற்போது அவர் அஜித்துடன் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்திருக்கிறது. இந்த படத்தில் அஜித்திற்கு மூன்று ரோல்களை ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்துள்ளாராம். இதை உறுதிப்படுத்தும் வகையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.
அதில் வித்தியாசமான லுக்கில் இருந்தார் அஜித்குமார். அதுவரை அப்படி ஒரு துள்ளலான அஜித்தை தாங்கள் பார்த்ததில்லை என்று பலரும் கமெண்ட் அடித்தனர். மைத்திரி மூவிஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக, தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா அல்லது கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரில் ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
படத்தில் மீனாவின் நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் கடந்த 15 நாட்களாக நடைபெற்றது. இந்நிலையில் தற்போது முதல் கட்ட சூட்டிங் ஆதிக் ரவிச்சந்திரன் முடித்திருக்கிறார். ஒரு குத்து பாடலும் படமாக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, ரஷ்ய நாட்டில் நடக்க இருப்பதாக தெரிகிறது. இந்த இடைவெளியில் அஜித் குமார் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடிப்பார் என்று கூறப்படுகிறது.





