- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்னைக்கு வெளியாகிற விடாமுயற்சி அப்டேட்டுக்கான தகவல் இதுதானாம்... போடுங்கடா வெடிய என அஜித் ரசிகர்கள் ஆரவாரம்...

இன்னைக்கு வெளியாகிற விடாமுயற்சி அப்டேட்டுக்கான தகவல் இதுதானாம்… போடுங்கடா வெடிய என அஜித் ரசிகர்கள் ஆரவாரம்…

- Advertisement -

அண்மை காலமாக அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்டே அழுத்தி விட்டார்கள். வலிமை திரைப்படத்தில் தொடங்கிய அவர்களின் வலி தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. வினோத் இயக்கத்தில் உருவான அந்த திரைப்படம், கொரோனா போன்ற பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு தடைப்பட்டு பின்னர் எடுக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலங்களில், ஒரு அப்டேட் கூட விடாமல் ரசிகர்களை சோதித்தது படக்குழு.

 

- Advertisement -

ஆனால் அஜித் ரசிகர்கள் விட்ட பாடில்லை, எங்கு சென்றாலும் வலிமை அப்டேட் வலிமை அப்டேட் என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அது மிகப்பெரிய அளவில் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தது. மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினிடமும் இதையேதான் கேட்டார்கள்.

 

- Advertisement -

இப்படி அஜித் ரசிகர்கள் அலப்பறை கொடுக்க, ஒரு வழியாக படம் வெளியாகி அது படுதோல்வியையும் சந்தித்தது. இதனைத் தொடர்ந்து துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆக, விடாமுயற்சி திரைப்படமும் வளர்ந்தது. இதற்கும் இதே கதையை தான் படக்குழு செய்து வந்தது. அப்டேட் விடாமல் அஜித் ரசிகர்களை சோதித்தது.

 

ஆனால் இந்த முறை ரசிகர்கள் வலிமை படத்திற்கு செய்த அலப்பறையை கூட்டவில்லை. இருப்பினும் அவர்கள் ஒவ்வொரு சமயமும் எதிர்பார்த்து இருந்த நேரத்தை பொய்யாக்கியது படக்குழு. குறிப்பாக அஜித் பிறந்தநாளில் நிச்சயம் ஏதாவது ஒரு அப்டேட் வரும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் அதையெல்லாம் கொடுக்காமல் ஏமாற்றியது லைக்கா நிறுவனம்.

 

படத்தில் திரிஷா அர்ஜுன் ஆரவ் ரெஜினா உள்ளிட்டோரெல்லாம் நடிப்பது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலமாகவே அஜித் ரசிகர்களுக்கு தெரியவந்தது. அதேபோல் இதற்கு அனிருத் இசையமைப்பதும், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தான் உறுதிப்படுத்தினார். இப்படியான சூழலில், முதல்முறையாக விடா முயற்சி அப்டேட் இன்று வெளியாகிறது.

 

இன்று ஏழு மணிக்கு இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று சுரேஷ் சந்திரா ஏற்கனவே கூறியிருந்தார். அது மட்டுமல்லாமல், லைக்கா நிறுவனத்தின் பெயரையும் அவர் பதிவிட்டு இருந்தார். இதனால் விடாமுயற்சிக்கான அப்டேட்டிற்கு ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இதனிடையே தீபாவளி ரிலீஸ் குறித்து தான் புதிய அப்டேட் இருக்கும் என்று பலரும் கூறி விடுகின்றனர். இதைக் கேட்டு அஜித் ரசிகர்கள் அப்படி என்றால் இந்த முறை தல தீபாவளி தான் என்று கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்