- Advertisement -
Homeபொழுதுபோக்குஹவுஸ்புல் 5 படம் எப்படி இருக்கிறது… முகமூடி அணிந்து ரசிகர்களிடம் விமர்சனம் கேட்ட பிரபல பாலிவுட்...

ஹவுஸ்புல் 5 படம் எப்படி இருக்கிறது… முகமூடி அணிந்து ரசிகர்களிடம் விமர்சனம் கேட்ட பிரபல பாலிவுட் நடிகர் – ரஜினிக்கு வில்லனா நடிச்சு அசத்தியவராச்சே?

- Advertisement -

இப்போதெல்லாம் ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிப்பது அந்த படத்தை இயக்கிய இயக்குனரோ தயாரிப்பாளரோ ஹீரோவோ இசையமைப்பாளரோ அல்ல. படம் ரிலீஸான அன்று முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும் ரசிகர்கள் சொல்லும் உண்மையான விமர்சனம்தான் அந்த படத்தின் தலை எழுத்தையே தீர்மானிக்கிறது. அதனால் அந்த விமர்சனம்தான் அந்த படத்தின் வெற்றி தோல்வி இரண்டில் எது என்பதை தீர்மானிக்கிறது.

நடிகர் அக்சய் குமார் அபிஷேக் பச்சன் அர்ஜூன் ராம்பால் மற்றும் தர்மேந்திரா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் ஹவுஸ்புல் 5. இந்த படம் கடந்த 6ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

கடந்த 2 நாட்களில் ஹவுஸ்புல் 5 படம் 50 கோடி ரூபாய் வசூலை தாண்டி இருக்கிறது. இந்த படம் முதல் நாளில் 24 கோடி ரூபாயும் 2வது நாளையும் கிட்டத்தட்ட 30 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. தொடர்ந்து படத்துக்கு கிடைத்து வரும் வரவேற்பும் ஆதரவும் இன்னும் சில தினங்களில் இந்த படம் ரூ. 100 கோடி வெகு எளிதாக கடந்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஹவுஸ்புல் 5 படம் எப்படி இருக்கிறது என திரையரங்க வாசலில் நடிகர் அக்சய் குமார் முகமூடி அணிந்தபடி ரிவ்யூ கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தியேட்டர் வாசலில் படம் பார்த்துவிட்டு வந்த ரசிகர்களிடம், ஹவுஸ்புல் 5 படம் குறித்து கேட்பதும் ரசிகர்கள் பதில் அளிக்கும் அந்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

ஆனால் நடிகர் அக்சய் குமார் முகத்தை முற்றிலும் மறைத்தபடி முகமூடி அணிந்திருந்தால் யாரும் அடையாளம் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக நடிகர்கள் மற்றவர்கள் மூலமாக தான் தங்களது படம் குறித்த விமர்சனத்தை அறிய விரும்புவார்கள். அல்லது இயக்குனர் தயாரிப்பாளர் மூலமாக படத்துக்கு கிடைத்த விமர்சனம் குறித்து கேட்டு தொிந்து கொள்வார்கள்.

ஆனால் பாலிவுட் ஸ்டார் நடிகரான அக்சய்குமார், இப்படி நேரடியாக களத்தில் இறங்கி ரசிகர்களிடம் நேரடியாக ரிவ்யூ கேட்டது பாலிவுட்டில் பெரிய அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தின் 2ம் பாகம் 2.0 படத்தில் பக்‌ஷி ராஜா கேரக்டரில் பறவைகளின் காதலராக வில்லன் கேரக்டரில் அக்‌ஷய்குமார் அற்புதமான நடிப்பை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்