- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது, அந்த படத்துல தனுஷூக்கு வில்லனா நடிக்கப் போறது இந்த பிரபல ஹீரோவா? - போடு...

என்னது, அந்த படத்துல தனுஷூக்கு வில்லனா நடிக்கப் போறது இந்த பிரபல ஹீரோவா? – போடு வெடிய, அப்போ படம் வேற லெவலுன்னு சொல்லுங்க!

- Advertisement -

நடிகர் தனுஷ், இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன். அவரது சொந்த அண்ணன் செல்வராகவன்தான், துள்ளுவதோ இளமை படம் மூலம், தனுஷை ஹீரோவாக உருவாக்கியவர். தெருவில் சின்ன பசங்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்த தனுஷை அப்படியே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்து போய் நடிக்க வைத்தவர்தான் செல்வராகவன்.

அந்த படத்தை தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, புதுப்பேட்டை, புதுக்கோட்டையில் இருந்து சரவணன், சுள்ளான் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார் தனுஷ். தொடர்ந்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற வெற்றிமாறனின் படங்களில் நடித்து வேற லெவல் நடிகராக மாறிவிட்டார் தனுஷ்.

- Advertisement -

இப்போது தனுஷ் தனது இயக்கத்தில் 50வது படத்தை உருவாக்கி வருகிறார். கதை திரைக்கதை எல்லாமே தனுஷ்தான். ஏற்கனவே ப. பாண்டி என்ற படத்தை இயக்கியவர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவதாக இயக்கும் இந்த படத்திற்கு ராயன் என தனுஷ், பெயர் வைத்துள்ளார். இந்த படத்தில் செல்வராகவன், சரவணன், காளிதாஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இதுமட்டுமின்றி நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் டைரக்ட் செய்துள்ளார் தனுஷ். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது. இதில் தனது சொந்த அக்காவின் மகனை கதாநாயகனாக்கி உள்ளார் தனுஷ். இந்த படத்தில் அஜீத்குமார் ரீல் மகள், அதாவது விஸ்வாசம், என்னை அறிந்தால் படத்தில் அஜீத் மகளாக நடிந்திருந்த அனிகா சுரேந்திரன்தான் கதாநாயகியாக நடித்துள்ளார்.

- Advertisement -

அத்துடன் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்திலும் தனுஷ், இளையராஜா கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தை கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில் நடிக்க தனுஷூக்கு சம்பளமாக ரூ. 50 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது. ராயன் படத்தை முடித்த பிறகு இளையராஜா வரலாறு படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.

இதற்கிடையே தெலுங்கு பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில், இப்போது குபேரா என்ற படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். ஐதராபாத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் ஒரு மாதமாக நடந்து வருகிறது. பிச்சைக்காரனாக இருக்கும் ஹீரோ, பெரிய அரசியல் தலைவராக மாறுவதுதான் கதை. இந்த படத்தில் வில்லனாக தெலுங்கு படவுலகின் ஹீரோ நடிகர் நாகார்ஜூனா நடிக்க இருக்கிறார். இவர் நடிகர் கார்த்தியுடன் தோழா படத்தில் நடித்தவர்.

- Advertisement -

சற்று முன்