- Advertisement -
Homeபொழுதுபோக்குமக்கள் வரிப்பணத்தை உங்க இஷ்டத்துக்கு செலவு பண்ணலாமா? தன் மீது எழுந்த புகாருக்கு புரட்சித் தலைவர்...

மக்கள் வரிப்பணத்தை உங்க இஷ்டத்துக்கு செலவு பண்ணலாமா? தன் மீது எழுந்த புகாருக்கு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தந்த பதிலடி – அவர்தான் மன்னாதி மன்னன் ஆச்சே?

- Advertisement -

தமிழக அரசியல் வரலாற்றில் இப்போதும் எம்ஜிஆர் என்ற 3 எழுத்து ஒரு மந்திரச் சொல்லாக தான் இருக்கிறது. அதனால்தான் சமீபத்தில் அரசியல் கட்சி துவங்கிய நடிகர் விஜய் கூட எம்ஜிஆரை புகழ்ந்து மேடைகளில் பேசி வருகிறார். இதற்கு முன்பு நடிகர் விஜயகாந்தை கருப்பு எம்ஜிஆர் என்று ரசிகர்கள் புகழ்ந்தார்கள். கடந்த 1987ம் ஆண்டில் டிசம்பர் மாதம் 24ம் தேதி புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மறைந்தார். ஆனால் இன்றும் அதே புகழோடு மக்கள் மனங்களில் வாழ்ந்து வருகிறார்.

அரசியல் சினிமா என இரண்டு துறைகளிலும் எம்ஜிஆரை போல மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்கள் இதுவரை யாருமே இல்லை என்று உறுதியாக சொல்லலாம். அவர் தமிழகத்தின் முதல்வராக இருந்த போது 3 முறை தொடர்ச்சியாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். இதில் ஒருமுறை அமெரிக்காவில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது தமிழ்நாட்டில் அதிமுக அதிக தொகுதிகளில் அதிக ஓட்டுகளில் வெற்றி பெற்றது.

- Advertisement -

எப்படியாவது முதல்வர் இருக்கையில் அமர்ந்துவிட வேண்டும் என்ற ஆசையில், அப்போதைய அரசியல் களத்தில் எதிராளியாக இருந்த கருணாநிதி, எம்ஜிஆர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருக்கிறார். அவர் திரும்பி வரும் வரை முதலமைச்சர் பதவியில் நான் இருந்து கொள்கிறேன். அவர் வந்த பிறகு முதல்வர் பதவியை அவருக்கு தந்து விடுகிறேன் என்றெல்லாம் நைசாக தேர்தல் பிரசாரத்தில் பேசி ஆதரவு கேட்டார். ஆனால் மக்கள் எம்ஜிஆரை தான் ஜெயிக்க வைத்தனர்.

இப்படி அமெரிக்காவில் எம்ஜிஆர் மருத்துவ சிகிச்சை பெற்று குணமாகி திரும்பி வந்த போது, மக்களின் வரிப்பணத்தை எடுத்து இப்படி லட்சம் லட்சமாக எம்ஜிஆர் தனது மருத்துவ சிகிச்சைக்காக செலவு செய்யலாமா? என்று அவர் மீது பகிரங்கமான குற்றச்சாட்டுகளை எழுப்பினர். அதனால் கோபமடைந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஒரு நடவடிக்கையை எடுத்தார்.

- Advertisement -

எனக்காக செய்யப்பட்ட மருத்துவ செலவுக்கான தொகையை மக்களிடமே நன்கொடையாக பெற்றுத் தருகிறேன் என்று கூறி, தலைமை செயலகத்தில் ஒரு டேபிள் சேர் போட்டு அமர்ந்திருக்கிறார். அப்போது பொதுமக்களே 100 ரூபாய் 200 ரூபாய் என திரண்டு வந்து நன்கொடை அளித்த நிலையில், பல லட்சம் ரூபாய் பணத்தை மீண்டும் அரசு கஜானாவுக்கே திருப்பி தந்திருக்கிறார் எம்ஜிஆர்.

ஒருமுறை எம்ஜிஆரை நாடி ஜோதிடம் பார்த்த ஒருவர், மிகவும் சங்கோஜத்துடன் ஒரு விஷயத்தை தயங்கி தயங்கி கூறியிருக்கிறார். அது அவரது ஜாதகப்பட்டி பிச்சை எடுக்கும் யோகம் இருப்பதாக சொல்லி இருக்கிறார். அதே கேட்டவுடன் எம்ஜிஆர் சிரித்து விட்டாராம். ஆனால் அதன்படிதான் இப்படி தனது மருத்துவ செலவுக்காக மக்களிடம் பணம் வசூலித்தார். அது அவரது ஜாதகம் செய்த ஒரு விஷயம்தான் என்று இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்