- Advertisement -
Homeபொழுதுபோக்குஏதே... இப்போ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சசிகுமார் படம்... அந்த கமல் படத்தோட இன்ஸ்பிரேஷனா... அதோட இரண்டாம்...

ஏதே… இப்போ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சசிகுமார் படம்… அந்த கமல் படத்தோட இன்ஸ்பிரேஷனா… அதோட இரண்டாம் பாகம் எடுக்கவும் ஆசையா… ஃப்ளாஷ்பேக்கை ஓபன் செய்த இயக்குனர்…

- Advertisement -

இந்த வாரம் இரண்டு திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி உள்ளன. இதில் ஒன்று சூர்யா நடித்திருக்கும் ரெட்ரோ திரைப்படம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. அதேசமயம், படம் ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே ரெட்ரோ திரைப்படம் உலகம் முழுவதும் 46 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இதனுடன் சேர்ந்து வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் கவனம் பெற்றுள்ளது.

அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இந்தத் திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் இரண்டும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இலங்கையில் இருந்து ஒரு குடும்பம் தமிழகத்திற்கு வர அதன் பிறகு ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை அந்த திரைப்படத்தின் ட்ரெய்லரே உணர்த்தி இருந்தது.

சசிகுமார் படத்தின் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு மனைவியாக சிம்ரன் நடித்துள்ளார். யோகி பாபு ரமேஷ் திலக் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் படம் கடந்த ஒன்றாம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இலங்கையில் இருந்து சசிகுமார் குடும்பம் ராமேஸ்வரம் திரும்ப, அங்கு ஒரு குண்டு வெடிப்பும் நிகழ்கிறது. பிறகு என்ன நடக்கிறது என்பதைத்தான் உருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் எடுத்து இருக்கிறார் இயக்குனர் அபிஷன். கிளைமாக்ஸ் காட்சி மிக அழுத்தமாக எடுக்கப்பட்டிருக்க, பலரும் இத்திரைப்படத்திற்கு பாராட்டு தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த சூழலில் பேட்டி ஒன்றில் டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் அபிஷன் கூறியிருப்பதாவது, தெனாலி திரைப்படம் தான் எனக்கான இன்ஸ்பிரேஷன். நான் அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். கமல் சார் ஒரு வயது முதிர்ந்த கதாபாத்திரத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து வைத்திருந்தேன். பிறகு தனியாக ஒரு குடும்பக் கதையையும் தயார் செய்து வைத்திருந்தேன். கிளைமாக்ஸ் காட்சியை நோக்கியே கதை இருக்க வேண்டும் என்று செட்டப் செய்து உருவாக்கப்பட்டது தான் இந்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் என்று கூறுகிறார்.

சற்று முன்