- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவர்கள் மக்கள் திரைப்படங்களை பார்க்க விடாமல் தடுக்கின்றனர் - இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் எழுப்பிய பகீர்...

அவர்கள் மக்கள் திரைப்படங்களை பார்க்க விடாமல் தடுக்கின்றனர் – இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் எழுப்பிய பகீர் குற்றச்சாட்டு!

- Advertisement -

நடிகர் சூர்யா பூஜா ஹெக்டே நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த மே 1ம் தேதி ரெட்ரோ படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் கலமையான விமர்சனங்களை பெற்றது. தியேட்டரிக்கல் நான் தியேட்டரிக்கல் மூலம் இந்த படம் ரூ. 235 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்பட்டது. இந்த படத்தின் சக்சஸ் மீட்டில் நடிகர் சூர்யா ரூ. 10 கோடி நன்கொடையாக அகரம் பவுண்டேசனுக்கு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் தமிழ்நாட்டில் ரெட்ரோ படத்துக்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் படம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பை பெற்றதாகவும் அதே நேரத்தில் ரெட்ரோபடம் குறித்து சிலர் நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பியதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

ரெட்ரோ படம் குறித்து கார்த்திக் சுப்பராஜ் கூறியதாவது. ரெட்ரோ படம் 4 முதல் 5 எபிசோடுகளைக் கொண்டது. ஒவ்வொன்றும் 35 முதல் 40 நிமிடங்களை கொண்டிருந்தன. இது ஆழமான உணர்ச்சிகள் விரிவான அதிரடி காட்சிகள் என ஆன்மீகம் கல்ட் சிரிப்பு கோணத்தில் கூடுதல் விவரங்களுடன் அதிக நேரம் கொண்ட படமாக உருவாக்கினோம். ஆனால் இங்குள்ள வியாபார நோக்கத்தின் காரணமாக 3 மணி நேரமாக படத்தை சுருக்க வேண்டியதாகி விட்டது.

அமெரிக்காவில் நீட்டிக்கப்பட்ட நேரம் கொண்ட படமாக ரெட்ரோ வெளியானது. அங்குள்ள நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் நீட்டிக்கப்பட்ட படமே வெளியாகி உள்ளது. ஆனால் இந்தியாவிலும் ஓடிடியில் அதுபோன்ற கூடுதல் நேரம் கொண்ட படமாக வெளியிட ஓடிடி நிறுவனத்திலும் பேசினேன். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். படம் வெளியாகி 3 4 மாதங்களுக்குப் பிறகு இந்த நீட்டிக்கப்பட்ட காட்சிகள் கொண்ட படமாக வெளியிடுவது தொடர்பாக ஓடிடி நிறுவனத்திடம் தொடர்ந்து பேசி வெளியிட முயற்சித்து வருகிறேன்.

- Advertisement -

பணம் பெற்றுக்கொண்டு ரிவ்யூ சொல்வதைவிட சிலர் பணம் பெற்றுக்கொண்டு ஒரு குறிக்கோளுடனும் வெறுப்புடனும் செயல்படுவது வேதனையாக உள்ளது. இதற்காகவே ஒரு அலுவலகம் அமைத்து குழு அமைத்து செயல்படுவதாக கேள்விப்பட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. இது சினிமாவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

திரைப்படங்கள் எப்போதும் உங்களை பாதிக்காது. ஒரு சிலர் மக்களை திரைப்படங்களுக்கு போகவிடாமல் தடுப்பதை சமூக சேவையாக கருதுகிறார்கள். மது குடிப்பதை சிகரெட் பிடிப்பதை தடுக்கலாம். படம் பார்ப்பதை ஏன் தடுக்க வேண்டும்? திரைப்படங்களை ரசிகர்களிடம் விட்டுவிடுங்கள். அவர்கள் முடிவு செய்யட்டும். நல்ல படங்களை ஆண்டவன் சோதிப்பான். ஆனால் கைவிட மாட்டான் என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆவேசமாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்