- Advertisement -
Homeபொழுதுபோக்குஅயோத்தி திரைப்பட இயக்குனரின் அடுத்த படைப்பு... ஹீரோவாக நடிக்கப் போவது இவர் தானாம்...

அயோத்தி திரைப்பட இயக்குனரின் அடுத்த படைப்பு… ஹீரோவாக நடிக்கப் போவது இவர் தானாம்…

- Advertisement -

கடந்த ஆண்டு எந்தவித பரபரப்பும் இல்லாமல் வெளியாகி விமர்சன ரீதியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த திரைப்படம் தான் அயோத்தி. இதனை மந்திரமூர்த்தி என்பவர் இயக்கியிருந்தார். படத்தில் நாயகனாக சசிகுமார் நடித்திருந்தார். சசிகுமாருக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த மிகப்பெரிய வெற்றி தான் அயோத்தி திரைப்படம்.

 

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் இன்று வரை கொண்டாடி வரும் சுப்பிரமணியபுரம் திரைப்படத்தை கொடுத்தவர் சசிகுமார். கல்ட் கிளாசிக் திரைப்படமாக உருவான அது, பல்வேறு திரைப்படங்களுக்கு டெம்ப்ளேட் ஆக அமைந்தது. மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியை மையப்படுத்தி எத்தனையோ திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும், சுப்பிரமணியபுரத்திற்கு என்று ஒரு தனித்துவம் இருக்கும்.

 

- Advertisement -

அதேபோல தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களில் வெளியான சிறந்த திரைப்படங்களை நாம் பட்டியலிடும்போது அதில் நிச்சயம் சுப்ரமணியபுரத்திற்கு ஒரு தனி பங்கு இருக்கும். இதற்குப் பிறகு தொடர்ந்து நடிப்பிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்தார் சசிகுமார். நாடோடிகள் படத்தில் தொடங்கி அவரது பாதை சரியாகவே சென்று கொண்டிருந்தது.

 

ஆனால் ஒரே மாதிரியான திரைப்படம், அதே கிராமத்து பின்னணி என ஒரு கட்டத்தில் சசிகுமார் நடித்த திரைப்படங்கள் ரசிகர்களுக்கு சலிபூட்ட ஆரம்பித்தன. சுந்தரபாண்டியன் திரைப்படம் மட்டும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தர, மற்ற திரைப்படங்கள் வந்த இடம் தெரியாமல் ஓடிப் போயின.

 

பிரம்மன், வெற்றிவேல், பலே வெள்ளைய தேவா, கொடிவீரன், அசுரவதம், கென்னடி கிளப், அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, கொம்பு வச்ச சிங்கமடா, ராஜ வம்சம், எம்ஜிஆர் மகன், காரி, நான் மிருகமாய் மாற என்று அவரது தோல்வி திரைப்படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் எந்த திரைப்படமும் க்ளிக் ஆகதால், மார்க்கெட்டை இழந்த சசிகுமாருக்கு மறுபிறவியை கொடுத்தது அயோத்தி திரைப்படம்.

 

வடமாநிலத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வந்தவர்கள் விபத்தில் சிக்கிக் கொள்வதும், அதன் பிறகு நடக்கும் காட்சிகளையும் உணர்வுபூர்வமாக சொல்லியதால் இந்த திரைப்படம் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் இயக்குனர் மந்திரமூர்த்தி அடுத்ததாக, கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அன்புச் செழியன் உடன் கையெழுத்திட்டு இருக்கிறார். இந்த நிலையில் அவர் இயக்கப் போகும் திரைப்படத்தில் மீண்டும் சசிகுமாரே கதாநாயகனாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகிறது.

- Advertisement -

சற்று முன்