- Advertisement -
Homeபொழுதுபோக்குரூ. 600 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகும் அல்லு அர்ஜூன் - அட்லி படம்;...

ரூ. 600 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகும் அல்லு அர்ஜூன் – அட்லி படம்; பாலிவுட் நடிகைகளிடம் பேச்சு வார்த்தை – படத்தில் 3 நாயகிகளா?

- Advertisement -

புஷ்பா மற்றும் புஷ்பா 2 படங்களுக்கு பிறகு ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் பான் இந்தியா நடிகராக பவனி வருகிறார். புஷ்பா படம் ரூ. 450 வசூலித்த நிலையில் புஷ்பா 2 படம் 1800 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்து வேற லெவலில் அல்லு அர்ஜூனை வைத்துவிட்டது. அதனால் அவரது அடுத்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்திய அளவில் ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்து ராஜா ராணி படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. முதல் படமே பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. தொடர்ந்து விஜய் நடிப்பில் தெறி மெர்சல் பிகில் என சூப்பர் ஹிட் வெற்றிப் படங்களை கொடுத்தார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக மாறினார்.

- Advertisement -

இந்தியில் பதான் படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை பெற்ற நடிகர் ஷாருக்கான் தனது அடுத்த படத்தை இயக்க அட்லிக்கு அழைப்பு விடுத்தார். ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கிய பதான் படம் ரூ. 1150 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. இப்போது பாலிவுட்டில் கவனிக்கப்படும் முக்கிய இயக்குனராக அட்லி உள்ளார்.

இந்த சூழலில் சன் பிக்சர்ஸ் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கும் பிரமாண்ட படத்தை அட்லி இயக்குகிறார். இது அட்லிக்கு 6வது படமாகவும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூனுக்கு 22வது படமாகவும் உள்ளது. இதில் அட்லி சம்பளம் ரூ. 250 கோடி, அட்லி சம்பளம் ரூ. 100 கோடி என்றும் தகவல் வெளியாகி உள்ளது. சயன்டிபிக் கதையாக உருவாகும் இந்த படம் 2027ம் ஆண்டில் வெளிவர உள்ளது.

- Advertisement -

தற்போது இந்த படத்தில் அல்லு அர்ஜூனுக்கு நாயகியாக நடிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நடிகை பிரியங்கா சோப்ராவிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், அவர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் நடித்து வருவதால், கால்ஷீட் பிரச்னை என மறுத்துவிட்டதாக தெரிகிறது.

மேலும் சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதற்கிடையே படத்தில் 3 நாயகிகள் இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஜான்வி கபூர் திஷா பதானி ஷ்ரத்தா கபூர் என 3 பாலிவுட் நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஜான்வி கபூர் படத்தில் பிரதான நாயகியாக அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் பாலிவுட் நடிகர் ஒருவர்தான் வில்லனாக நடிப்பார் என்றும் தகவல் கசிந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்