- Advertisement -
Homeபொழுதுபோக்குதீபாவளி பண்டிகை நாளில் சிவகார்த்திகேயன். சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் படம்; 28 நாட்களில்...

தீபாவளி பண்டிகை நாளில் சிவகார்த்திகேயன். சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் படம்; 28 நாட்களில் மொத்த வசூல் இத்தனை கோடிகளா? சட்டை காலரை தூக்கிவிடும் எஸ்கே ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திராக இருப்பவர் நடிகர் விஜய். அவர் தற்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கியுள்ள விஜய், சினிமாவுக்கு டாடா சொல்லிவிட்டு, முழுநேர அரசியல்வாதியாக, தமிழ்நாட்டு அரசியல் களத்தில் குதிக்க தயாராகி விட்டார்.

இந்நிலையில், நடிகர் விஜய் சினிமாவில் காலியாக விட்டுச் செல்லும் அவரது இடத்தை தக்க வைத்துக்கொள்ள இருப்பது நடிகர் சிவகார்த்திகேயன் தான் என்னும் சொல்லும் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு அபிமானத்தைப் பெற்றிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்கக்கது.

- Advertisement -

கடந்த தீபாவளியன்று, அக்டோபர் 31ம் தேதி சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்த அமரன் படம் வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி டைரக்‌ஷன் செய்திருந்த இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது. மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதைக்களமாக கொண்டு உருவான இந்த படம் பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது.

அமரன் படம் வெளியான 3 நாட்களில், உலக அளவில் ரூ. 100 கோடி வசூலை கடந்தது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படங்களில் இதுவரை 3 நாட்களில் ரூ. 100 கோடி வரை வசூலை கடந்த முதல் படமாக அமரன் படம் அமைந்தது. மேலும் இந்த படத்தை பார்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைபிரபலங்கள் அனைவருமே வெகுவாக பாராட்டினர். குறிப்பாக சாய்பல்லவி நடிப்பு வேற லெவலில் இருந்தது படத்தின் வெற்றிக்கு பெரிய பக்கபலமாக அமைந்தது.

- Advertisement -

இந்த படம் அடுத்த 10 நாட்களில் ரூ. 200 கோடி வசூலை கடந்த நிலையில், கடந்த வாரத்தில் ரூ. 300 கோடி வசூலையும் கடந்துள்ளது. கங்குவா படம் தோல்வியடைந்த நிலையில், தொடர்ந்து 4வது வாரமாக பல தியேட்டர்களில் இன்னும் அமரன் படம் வெற்றிக்கரமாக ஒடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் வெற்றி விழா டிசம்பர் மாதத்தில் நடக்க உள்ளது. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

இந்த சூழலில் அமரன் படம் வெளியாகி 28 நாட்கள் ஆன நிலையில், உலகளவில் இதுவரை அமரன் படம் ரூ. 321 கோடி என்ற வசூல் சாதனையை கடந்துள்ளது. சிவகார்த்திகேயன் இதுவரை 22 படங்களில் நடித்த நிலையில் அவரது படங்களில் இவ்வளவு பெரிய தொகையை வசூலித்த முதல் படம் அமரன் என்பதால், அவரது ரசிகர்கள் பெரிய உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை ரூ. 55 கோடியாக உயர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்