- Advertisement -
Homeபொழுதுபோக்குநம்ம மார்க்கெட் அவ்வளவுதான் போல- கமல்ஹாசனை பார்த்து அரண்டுப்போன அமிதாப் பச்சன், அப்படி என்ன நடந்திருக்கும்?

நம்ம மார்க்கெட் அவ்வளவுதான் போல- கமல்ஹாசனை பார்த்து அரண்டுப்போன அமிதாப் பச்சன், அப்படி என்ன நடந்திருக்கும்?

- Advertisement -

உலகநாயகன் என்று புகழப்படும் கமல்ஹாசன், தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கோலிவுட்டை பொறுத்தவரை ரஜினிகாந்திற்கு போட்டி நடிகராக திகழ்ந்து வரும் கமல்ஹாசன், இந்திய சினிமாவை பொறுத்தவரை ஒரு தனித்துவமான நடிகராக வலம் வருகிறார்.

சிவாஜி கணேசனுக்குப் பிறகு நடிப்பிற்கு பல்கலைக்கழகமாக திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன். அவர் பல மொழித் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமா உலகில் கமல்ஹாசன் ஒரு முன்னணி நடிகர். ஆனால் மற்ற மொழித் திரைப்படங்களில் அவர் நடித்தபோது அந்த மொழியில் உள்ள டாப் நடிகர்களுக்கு சவாலாக இருந்திருக்கிறார்.

- Advertisement -

அந்தளவுக்கு கமல்ஹாசன் தனது அசத்தலான நடிப்பால் பலரையும் ஈர்த்தார். அந்த வகையில் பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனே கமல்ஹாசனை பார்த்து பயந்தாராம்.

1981 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் பாலிவுட்டில் வெளிவந்த திரைப்படம் “ஏக் துஜே கேலியே”. இத்திரைப்படத்தை பாலச்சந்தர் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் ஒரு பிளாக் பஸ்டர் திரைப்படமாகும். அந்த காலகட்டத்தில் 50 லட்சம் செலவில் இத்திரைப்படம் உருவானது. ஆனால் வசூல் செய்ததோ 10 கோடி.

- Advertisement -

இந்த மாபெரும் வெற்றி அப்போதுள்ள ஹிந்தி நடிகர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்ததாம். ஏனென்றால் கமல்ஹாசன் பாலிவுட் சினிமா உலகில் பரிச்சயமாகாத நடிகர். இவ்வாறு பரிச்சயமில்லாத ஒரு நடிகரின் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது, அதுவும் ஒரு தமிழ் நடிகரின் படம் ஹிட் அடித்தது அங்குள்ள முன்னணி நடிகர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லையாம்.

குறிப்பாக பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் கமல்ஹாசனின் படம் மாபெரும் வெற்றிபெற்றதை பார்த்து பயந்துவிட்டாராம். கமல்ஹாசனை பாலிவுட்டில் நடிக்க வைக்க கூடாது என்று பல வேலைகளை பார்த்தாராம். ஆதலால் கமல்ஹாசனால் பாலிவுட்டி தொடர்ந்து சில திரைப்படங்களே நடிக்க முடிந்ததாம்.

- Advertisement -

சற்று முன்