இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருப்பவர் பாலிவுட் சீனியர் நடிகர் அமிதாப் பச்சன். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மலையாளத்தில் மம்முட்டி, தெலுங்கில் சிரஞ்சீவி, கன்னடத்தில் சிவராஜ் குமார் போல இந்திய சினிமாவில் சீனியர் நடிகராக இப்போதும் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் அமிதாப் பச்சன்.
அமிதாப் பச்சன் வயது 80களை கடந்த நிலையில், இப்போது அவர் அதிகமாக படங்களில் நடிப்பதில்லை என்றாலும், தேர்ந்தெடுக்கப்படும் சில படங்களில் நல்ல கேரக்டரில், கேமியோ ரோலில் நடிப்பது அவரது வழக்கமாக இருந்து வருகிறது. அது மட்டும் இன்றி விளம்பர படங்களில் அதிகமாக அவர் நடித்து வருகிறார்.
நடிகர் அபிஷேக் பச்சன் மகன் அபிஷேக் பச்சனும் இந்தியில் முன்னணி நடிகராக இருக்கிறார். அவரது மருமகள் ஐஸ்வர்யா ராய் தென்ந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் சிறப்பாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமிதாப்பச்சன் உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் நெருங்கிய நண்பரும் ஆவார்.
அதேபோல் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் இடையே பல ஆண்டுகளாக நெருக்கமான நட்பு இருக்கிறது. இந்தியில் அந்தகானூன், ஹூம் உள்ளிட்ட சில படங்களில் நடிகர் ரஜினிகாந்த் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்திருக்கிறார். 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்த் – அமிதாப் பச்சன் வேட்டையன் படத்தில் இணைந்திருக்கின்றனர்.
இயக்குனர் தசெ ஞானவேல் இயக்கத்தில் வரும் 10ம் தேதி ரிலீஸாகும் வேட்டையன் படத்தில் கேமியோ ரோலில் அமிதாப் பச்சன் நடித்திருக்கிறார். முதலில் இந்த படத்தில் அமிதாபச்சன் நடிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்திடம் இயக்குனர் தசெ ஞானவேல் கேட்டபோது, ஏற்கனவே சில படங்களில் நானும் அவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்று கேட்டு வந்தனர். ஆனால் நானும் அமிதாப் பச்சனும் அதை வேண்டுமென்றே தவிர்த்து விட்டோம். ஆனால் இப்போது நீங்கள் விருப்பப்பட்டு கேட்பதால் அமிதாப்பச்சனிடம் கேட்டுப் பாருங்கள். அவர் ஒத்துக் கொள்வாரா என்று தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.
ஆனால் வேட்டையன் படத்தில், தனது கேரக்டரின் முக்கியத்துவத்தை அறிந்த அமிதாப் பச்சன், உடனடியாக ஓகே சொல்லிவிட்டார். அதன்பிறகு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினர் மும்பையில் சென்று தங்கி அமிதாப் பச்சன் நடிக்க வேண்டிய காட்சிகளை எடுத்து முடித்துவிட்டு திரும்பி வந்துள்ளனர். லைகா புரடக்சன்ஸ் தயாரித்துள்ள வேட்டையன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க நடிகர் அமிதாப் பச்சன் 7 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





