தமிழ் சினிமாவின் எம்ஜிஆர் சிவாஜி போல ரஜினி கமல் போல இப்போது விஜய் அஜித் குமார் தான் களத்தில் போட்டியாளர்களாக இருக்கின்றனர். அவர்களுக்குள் நல்ல நண்பர்களாக இருந்தாலும் அவர்களது ரசிகர்கள் போட்டியாளர்களாகத்தான் அஜீத் விஜய் நடித்த படங்கள் ரிலீஸ் ஆகும் போது சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
சமூக வலைதளங்களில் விஜய் படத்தை அஜீத் ரசிகர்கள் விமர்சித்தும், அஜித் படத்தை விஜய் ரசிகர்களும் விமர்சித்து மோதிக் கொள்கின்றனர். இது கடந்த பல ஆண்டுகளாக ட்ரெண்டிங்காகி வருகிறது. இந்த சூழலில் அஜித்குமாரின் தீவிர ரசிகரான வெங்கட் பிரபு, நடிகர் விஜயை வைத்து இயக்கிய படம் தி கோட் படத்தில் விஜய் அஜித் இடையே உள்ள நட்பை வெளிப்படுத்தும் விதமாக படத்தில் காட்சி வைத்தார்.
தி கோட் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில், விஜய் தனது மகளிடம் நீ யாருடைய பேன் என்று விஜய் கேட்கும்போது, அவர் தல பேன் என்று சொல்வது போல் வெங்கட் பிரபு காட்சி அமைத்திருந்தார். அப்போது பின்னணியில் மங்காத்தா படத்தின் தீம் மியூசிக் ஒலிப்பது போல் காட்டப்பட்டது.
ஆனால் அதே நேரத்தில் அந்த காட்சியில் கிரிக்கெட் கிரவுண்டில் தோனி கிரிக்கெட் விளையாடுவது போல் காட்சி வந்ததாலும், கிரிக்கெட் பார்க்க வந்த விஜய் மகள், நடித்திருந்தாலும் அவர் தல என்று சொல்வது நடிகர் அஜித்குமாரை அல்ல, கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோணியை தான் என்று ஒரு தகவல் வேகமாக பரவியது.
ஒரு நேர்காணலில் பங்கேற்ற அந்த நடிகையும், நான் தல பேன் என்று சொன்னது கிரிக்கெட் வீரர் தோனியை தான் என்று பேசியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் வெங்கட் பிரபு அஜித்தை அசிங்கப்படுத்தும் விதமாக செயல்பட்டு விட்டதாக புகார் எழுந்தது. இந்த படத்தில் தல என்று வருவது அஜித்குமாரை குறிப்பிடுகிறதா, மகேந்திர சிங் தோனியை ஐயா என்ற குழப்பத்தை ஏற்படுத்துவதாக, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் எழுந்தது.
இயக்குனர் வெங்கட் பிரபு இந்த பஞ்சாயத்து குறித்து ஒரு தெளிவான பதிலை கூறியிருக்கிறார். தி கோட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் தல பேன் என்று விஜய் மகளாக நடித்தவர் சொல்வது நடிகர் அஜித்குமாரை தான். அதனால்தான் அந்த காட்சியில் பின்னணியில் மங்காத்தா தீம் மியூசிக் ஒலிக்கிறது. அஜித்குமார் தல என்று தன்னை அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களை கூறியிருந்தாலும் இன்றும் ரசிகர்கள் அவரை தல என்றுதான் கூறுகின்றனர். விஜயின் மகள் கேரக்டர் தல பேன் என்று கூறுவது நடிகர் அஜித்குமாரை தான் என்று விளக்கமளித்து இந்த பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.





