- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவாஜி முன்பே அவரை போல ஷூட்டிங் ஸ்பாட்டில் நடித்துக் காட்டிய பாரதிராஜா, அதை பார்த்துக் கொண்டே...

சிவாஜி முன்பே அவரை போல ஷூட்டிங் ஸ்பாட்டில் நடித்துக் காட்டிய பாரதிராஜா, அதை பார்த்துக் கொண்டே இருந்த நடிகர் திலகம் – கடைசியில் என்ன செய்தார் தெரியுமா?

- Advertisement -

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன் ராதா சத்யராஜ் வடிவுக்கரசி அருணா ரஞ்சனி உள்ளிட்டோர் நடித்த படம் முதல் மரியாதை. கடந்த 1985ம் ஆண்டில் வெளியான இந்த படம் 41 ஆண்டுகள் கடந்தும் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு சூப்பர் ஹிட் கிளாசிக் படமாக இருக்கிறது. இளையராஜா இசையில் வைரமுத்து வரிகளில் இந்த படத்தின் பாடல்கள் எல்லாமே தேனில் ஊறிய பலாச்சுளைகளாக இன்றும் தித்திக்கின்றன.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சித்ரா லட்சுமணன் கூறியதாவது, முதல் மரியாதை படத்தில் கணவனிடம் கோபித்துக்கொண்டு சிவாஜியின் வளர்ப்பு மகள் அருணா வீட்டுக்கு வந்திருப்பார். அப்போது மீண்டும் வந்து கணவன் அழைத்ததும் அவனுடன் செல்ல அவர் தயாராகி விடுவார்.

- Advertisement -

இந்த காட்சியில் தனது மகளிடம் அவளது கணவன் குறித்து சிவாஜி கணேசன் பேச வேண்டும். அந்த காட்சி படமாக்கப்பட இருந்தது. அப்போது அந்த காட்சியில் நடிக்க வேண்டிய அருணாவிடம், சிவாஜி போல் நடித்துக்காட்டி அந்த காட்சியை அருணாவுக்கு பாரதிராஜா விளக்கி கொண்டிருந்தார்.

அப்போது அங்கே ஓரமாக அமர்ந்து இதை பார்த்துக்கொண்டே இருந்த சிவாஜி கணேசன், பாரதிராஜாவை அழைத்து இன்னொரு முறை அந்த காட்சியில் என்னை போல் நடித்துக்காட்டு என்றார். அதற்கு அண்ணே என்று பாரதிராஜா தயங்கினார். இல்லேப்பா அந்த காட்சியில் உன் நடிப்பு முகபாவனை பாடி லாங்க்வேஜ் எல்லாமே சிறப்பா இருந்துச்சு.

- Advertisement -

அதனால் மறுபடியும் நீ ஒருமுறை நடிச்சு காட்டினேன்னா அதே மாதிரி நான் உள்வாங்கி அந்த சீன்ல நடிச்சிடுவேன் என்று சொன்னார். அதன்பிறகு மீண்டும் பாரதிராஜா சிவாஜி கேரக்டரில் நடித்துக்காட்ட பிறகு அதே மாதிரி சிவாஜியும் அந்த காட்சியில் சிறப்பாக நடித்து முடித்தார்.

நடிகர் திலகம் நடிப்பு பல்கலை கழகம் என்று உலகமே சிவாஜியை கொண்டாடினாலும் அதை ஒரு போதும் அவர் தலையில் ஏற்றிக்கொண்டது இல்லை. எப்போதுமே தனது நடிப்பை சிறப்பாக தர வேண்டும் என்ற தேடல் அவருக்குள் இருந்தது. இதை முதல் மரியாதை படத்தில் நடித்த கலைஞர்கள் எல்லாமே நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது என்று சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்