சமீபத்தில் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய தொகுப்பாளர் நடிகர் விஜய் சேதுபதி, லீடர்ன்னா என்னன்னே தெரியாம லீடர் ஷிப்புன்னா என்னன்னே தெரியாம வாய்க்கு வந்த மாதிரி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துட்டு பிரச்னைகளும் பொறுப்பும் வரும்போது எதிரணி மேல பழியை தூக்கிப் போட்டுட்டு இல்லே அங்க தெறிச்சு ஓடறதுங்கறது லீடருக்கான குவாலிட்டி இல்லே. அது ஏமாற்று வேலை என்று பேசியிருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை வழிநடத்தும் தொகுப்பாளராக அவர் பேசிய இந்த கருத்துகளை, தவெக தலைவர் விஜயை குறிப்பிட்டு தான் அவர் பேசினார் என்று தவெகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து விஜய் சேதுபதியை கண்டபடி வசைபாடி வருகின்றனர். ஆனால் இது பொதுவான ஒரு கருத்துதான், யாரையும் குறிப்பிடுபவன அல்ல என்று விஜய் டிவி நிர்வாகமும் தெரிவித்துவிட்டது.
எனினும் விஜய் சேதுபதி பேசிய 20 வினாடிகள் கொண்ட அந்த பேச்சை இன்னும் தவெகவினர் இணையத்தில் வைரலாக்கி அவரை பற்றி தாறுமாறான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதில் மாஸ்டர் படத்தில் விஜயுடன் விஜய் சேதுபதி நடித்துதான் பெரிய நடிகரானார் என்றும் கூறி வருகின்றனர்.
உண்மையில் விஜய்க்கு மட்டுமல்ல, அவரை விட பெரிய நட்சத்திர சீனியர் நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கே வில்லனாக நடித்தவர் விஜய் சேதுபதி. பேட்ட படத்தில் ரஜினிக்கும் விக்ரம் படத்தில் கமலுக்கும் வில்லனாக நடித்திருந்தார். மேலும் இந்தியில் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாகவும் அவர் நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படத்தில் இடைவேளை வரை ஒரு குடிகாரனாக எந்நேரமும் போதையில் இருக்கும் ஒரு காலேஜ் புரபசர் கேரக்டரில் விஜய் நடித்திருந்தார். வழக்கம் போல வெறும் பில்டப்தான் அதில் காட்டியிருப்பார். ஆனால் மாஸ்டர் படத்தில் பவானி கேரக்டரில் விஜய் சேதுபதி நடிப்புதால் மிக அழுத்தமாக சிறப்பாக இருக்கும்.
ஒரு குற்றவாளியாக அவர் இருந்தாலும் அந்த வில்லத்தனமான நடிப்பில் அவர் முத்திரை பதித்திருப்பார். விஜய் சேதுபதி விக்ரம் படத்திலும் பேட்ட படத்திலும் கூட வில்லன் நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பார். அதனால் மாஸ்டர் படம் ஓடியதால் விஜய் சேதுபதியால் தான் விஜய்க்கு வெற்றியே தவிர, அதில் வேறு நடிகர் வில்லனாக நடித்திருந்தால் படமே இந்தளவுக்கு ஓடியிருக்காது என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.





