- Advertisement -
Homeபொழுதுபோக்குசென்னையை பார்த்தா, ரொம்ப கேவலமா இருக்குது, இந்த நேரத்துல அவங்க முகத்தை கொஞ்சம் காட்டுனா நல்லா...

சென்னையை பார்த்தா, ரொம்ப கேவலமா இருக்குது, இந்த நேரத்துல அவங்க முகத்தை கொஞ்சம் காட்டுனா நல்லா இருக்கும் – கோபப்பட்ட நடிகர் விஷால்

- Advertisement -

நடிகர் விஷால், தமிழ் சினிமாவில் மிக முக்கியமான முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் இருக்கிறார். அவ்வப்போது ஏதேனும் சமூக பிரச்னைகள், அரசியல் சார்ந்த கருத்துகளை விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.

இப்போது அவர் 3 நிமிடம் 7 விநாடிகள் பேசக்கூடிய ஒரு வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு பேசி இருக்கிறார். அதில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையால் சென்னை மாநகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருப்பதை சுட்டிக்காட்டி பேசி இருக்கிறார். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சென்னை அண்ணா நகரில் குடியிருக்கிறேன். என் வீட்டுக்குள்ளேயே ஒரு அடி தண்ணீர் வந்துவிட்டது. மற்ற ஏரியாக்களில் நிலமை மிக மோசமாக இருக்கிறது. மின்தடையால் குழந்தைகள், சிட்டிசன்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். என் வீட்டிலும் என் அப்பா, அம்மா சீனியர் சிட்டிசன்கள் தான். அவர்களும்தான் கஷ்டப்படுகின்றனர்.

கடந்த 2015ம் ஆண்டில் இதுபோல் ஒரு மழைவெள்ளம் வந்து, சென்னை மக்கள் மிகவும் துன்பப்பட்டனர். இப்போது 8 ஆண்டுகளுக்கு பிறகும், அதைவிட ஒரு மோசமான நிலையில் சென்னை மக்கள் தவிக்கின்றனர். மழைநீர் வடிகால் சேமிப்பு திட்டம் என்ற ஒரு திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிவித்தது. அந்த திட்டத்தை எங்கே துவங்கினார்கள், எங்கே முடித்தார்கள், எப்படி அந்த திட்டம் இருக்கிறது என்று எதுவுமே தெரியவில்லை.

- Advertisement -

ஒரு நடிகனாக அல்ல, ஓட்டுப்போட்ட ஒரு குடிமகனாக தான் இந்த விண்ணப்பத்தை வைக்கிறேன். சென்னை தொகுதிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் வெளியே வந்து மக்களுக்கு உதவ வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஒரு சில மக்கள் தானாக முன்வந்து உதவுவது அவர்களாக உதவட்டும். ஆனால், எம்எல்ஏக்கள் தேர்தல் இல்லாத இதுபோன்ற நேரத்தில் மக்களுக்கு அவர்களது முகத்தை காட்டினால் நன்றாக இருக்கும்.

இது அரசியல் குறித்த எனது விமர்சனமான பார்க்காதீர்கள். சென்னையில் இப்படி தண்ணீர் தேங்கியிருப்பதை பார்க்க தர்மசங்கடமாக, கேவலமாக இருக்கிறது. எதற்காக வரி கட்டுகிறோம் என்ற கேள்வியை கேட்க வைக்காதீர்கள் என்று மிக ஆவேசமாக அந்த வீடியோவில் நடிகர் விஷால் பேசியிருப்பது, இப்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்