- Advertisement -
சமீபத்தில் நடிகர் ஆனந்தபாபு ஒரு நேர்காணலில் கூறியதாவது, மருத்துவராகி இருக்க வேண்டிய நான் நடிகன் ஆனது விதி. பெங்களூரில் மருத்துவம் படிக்க வேண்டிய நான் நடனத்தையும் நண்பர்களையும் விரும்பியதால் அங்கு செல்லவில்லை. அப்போது கிடைத்த பட வாய்ப்புகள் என்னை நடிகனாக்கியது. என் அப்பா நாகேஷ் அவர்கள் எதிலும் திருப்தி அடையாமல் சிறப்பான காட்சிக்காக தொடர்ந்து உழைப்பார். அவரிடம் இருந்து கற்றுக் கொண்ட அந்த பாடத்தின்படி ஒவ்வொரு படத்தையும் ஒரு மைல் கல்லாக கருதுகிறேன் என்று நடிகர் ஆனந்தபாபு வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





