- Advertisement -
Homeபொழுதுபோக்குரசிகர்களை மீண்டும் கதற விட வருகிறார் இந்தியன் தாத்தா - வெகுவிரைவில் பிரபல ஓடிடி தளத்தில்...

ரசிகர்களை மீண்டும் கதற விட வருகிறார் இந்தியன் தாத்தா – வெகுவிரைவில் பிரபல ஓடிடி தளத்தில் இந்தியன் 2 ரிலீஸ் – படம் வந்தே 2 வாரம்தானே ஆச்சு…?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 12ம் தேதி இந்தியன் 2 படம் ரிலீஸானது. இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் பெரிய பொருட்செலவில் தயாரித்திருந்தது. படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் டைரக்ட் செய்திருந்தார். கமல்ஹாசனுடன் சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, பிரியா பவானி ஷங்கர். ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இந்தியன் படத்தை போல இந்தியன் 2 படத்தை எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு தியேட்டர்களில் மிகப்பெரிய ஏமாற்றமே கிடைத்தது. குறிப்பாக படத்தில் பல கெட்டப்புகளில் நடித்தும் கமல்ஹாசனின் நடிப்பு எடுபடவில்லை. அதே போல் ஷங்கரின் திரைக்கதையும் ரசிகர்களுக்கு பிடிபடவில்லை. குறிப்பாக படத்துக்கு அனிருத் இசை, மிகப்பெரிய பின்னடைவை தந்தது.

- Advertisement -

இந்தியன் 2 படம் குறித்து சமூக வலைதளங்களில் மோசமான விமர்சனங்களும், படம் குறித்த எதிர்மறையான கருத்துகளும் அந்த படத்தின் வெற்றியை மிக கடுமையாக பாதித்தது. இந்தியன் தாத்தா, படத்தில் லஞ்சம், ஊழல் செய்பவர்களை கதற விடாமல், படம் பார்க்க வந்த ரசிகர்களை இப்படி கதற விட்டு விட்டாரே, என்றுதான் பலரும் கமெண்ட் செய்து படத்தை கலாய்த்தனர்.

இரண்டு வாரங்களுக்கு மேல் உலகம் முழுவதும் திரையிடப்பட்ட இந்தியன் 2 படம், அதிகபட்சமாக ரூ. 150 கோடியை மட்டுமே வசூலித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. பல தியேட்டர்களில் பல நாட்களாகவே 50 பேர் கூட இல்லாத வகையில் காட்சிகள் திரையிடப்பட்டதாகவும், சில தியேட்டர்களில் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில், ஓடிடி தளத்தில் 8 வாரங்களுக்கு பிறகு இந்தியன் 2 படத்தை திரையிடும் திட்டத்தை கைவிட்டு, 4 வாரங்களுக்குள் திரையிடும் முடிவை, இந்த படத்தை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ள நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் முடிவு செய்துள்ளது. அதனால் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் இந்தியன் 2 படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.

வழக்கமாக ஒரு படம் ரிலீஸ் ஆன நாளில் இருந்து எட்டு வாரங்கள் கழித்து ஓடிடி தளத்தில் வெளியிடுவதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. இப்போது நடிகர்களை ஏ கிரேடு, பி கிரேடு என இரண்டு பிரிவுகளாக்கி அதில் ஏ கிரேடு நடிகர் படங்களை 8 வாரங்களுக்கு பிறகு, பி கிரேடு நடிகர் படங்களை 6 வாரங்களுக்கு பிறகு ஓடிடி தளங்களில் வெளியிட திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இந்தியன் 2 படம் மோசமான பிளாப் படமானதால், அதை 4 வாரங்களுக்குள் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட முடிவாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்