- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த மாதிரி ஒரு படம் பண்ண போறேன்… நடிகர் ஆண்டனி சொன்னதை கேட்டு வெலவெலத்துப் போன...

அந்த மாதிரி ஒரு படம் பண்ண போறேன்… நடிகர் ஆண்டனி சொன்னதை கேட்டு வெலவெலத்துப் போன ரசிகர்கள் – அந்த படத்தோட லேட்டஸ்ட் நிலவரம் அவருக்கு தெரியலையோ…?

- Advertisement -

ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. டிஸ்யூம் படம்தான் அவர் இசையமைத்த முதல் படம். டைலாமோ டைலாமோ என்ற பாடலை ஊரெங்கும் ஒலிக்க விட்டு இசை ரசிகர்களை குஷிப்படுத்தினார். தொடர்ந்து வேட்டைக்காரன் நான் அவன் இல்லை காதலில் விழுந்தேன் அங்காடித் தெரு மதகஜ ராஜா என பல படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்தார்.

தொடர்ந்து நான் என்ற படத்தின் மூலம் நடிகராக விஜய் ஆண்டனி முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றார். தொடர்ந்து சலீம் இந்தியா பாகிஸ்தான் பிச்சைக்காரன் திமிரு புடிச்சவன் அண்ணாதுரை சைத்தான் காளி எமன் கோடியில் ஒருவன் ரோமியோ என பல படங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

விஜய் ஆண்டனி நடித்த படங்களில் திமிரு புடிச்சவன் படமும் பிச்சைக்காரன் படமும் பெரிய அளவில் வரவேற்பை வெற்றியை பெற்ற படங்களாக இருந்தன. நாளை விஜய் ஆண்டனி நடித்த மார்கன் என்ற படமும் வெளியாக உள்ளது. இந்த படத்தை அவர் தயாரித்தும் இருக்கிறார். பல படங்களை விஜய் ஆண்டனி சொந்தமாக தயாரித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக விஜய் ஆண்டனி அவர் நடிக்கும் படங்களுக்கு அவரே இசையமைக்கிறார். அவரே தயாரிக்கவும் செய்கிறார். அதுமட்டுமின்றி வெளிநாடுகளில் அவரது இசை கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். ஆனால் இப்போதைய நிலவரப்படி ஒரு புதிய முடிவு எடுத்திருக்கிறார். அதாவது இசை கச்சேரிகள் நடத்துவதை தவிர்த்து விட்டு மற்ற நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்க முன்வந்திருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி கூறுகையில், கர்நாடகாவில் எப்படி காந்தாரா படம் வந்ததோ அதுபோல் ஒரு கிராமத்து கதையை பான் இந்தியா படமாக பிரமாண்டமாக எடுக்கப் போகிறேன். அதற்கான வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. அந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கும். அதற்கு டைட்டில் இன்னும் வைக்கவில்லை. விரைவில் அறிவிக்கிறேன், என்று கூறியிருக்கிறார்.

கன்னட நடிகர் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி தயாரித்த படம்தான் காந்தாரா. அவரே நாயகனாக நடித்து இயக்கி அவரே அந்த படத்தை தயாரித்திருந்தார். இப்போது காந்தாரா 2 படத்தை அவர் இயக்கி வரும் நிலையில், 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர். கடந்த வாரத்தில் அணையில் சென்ற படகு கவிழ்ந்து அனைவரும் போராடி உயிர் தப்பி நீந்தி வந்து கரை சேர்ந்திருக்கின்றனர். அவர்களே காந்தாரா 2 படத்தை எடுக்க திணறி வரும் நிலையில், அதுபோன்ற ஒரு படத்தை எடுப்பதாக விஜய் ஆண்டனி கூறுகிறாரே, காந்தாரா 2 லேட்டஸ்ட் நிலவரம் இவருக்கு தெரியாதோ என, தமிழ் சினிமா ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்