இயக்குனர் கே பாக்யராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. முதல் படத்திலேயே சிறந்த நடிப்பதல் தனது முத்திரையை பதித்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள ஊர்வசி, சீனியர் நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்படுவர்.
தமிழில் அவர் நான் பெத்த மகனே, மகளிர் மட்டும், ஆணழகன், இரட்டை ரோஜா, மைக்கேல் மதன காமராஜன், வீட்ல விசேஷம் என பல படங்களில் அவரது நடிப்பில் சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்தி இருப்பார். ஊர்வசி போல சிறந்த நடிகையாக பெயர் பெற வேண்டும் என வளரும் நடிகைகள் பலர் சொல்லும் அளவுக்கு சிறப்பான நடிகையாக ஊர்வசி திகழ்கிறார்.
காதலுக்கு மரியாதை, பூவே பூச்சூடவா, வருஷம் 16, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு போன்ற தமிழ் படங்களை இயக்கியவர் மலையாள பட இயக்குனர் பாசில். அவரது மகன்தான் பஹத் பாசில். தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். குறிப்பாக வேலைக்காரன் வேட்டையன் மாமன்னன் விக்ரம் உள்ளிட்ட படங்களில் பஹத்பாசில் நடிப்பு வேற லெவலில் இருந்தது.
வில்லனாக இருந்தாலும் குணச்சித்திர நடிப்பாக இருந்தாலும் தனது நடிப்பில் தனி முத்திரை பதித்து விடுகிறார் பஹத் பாசில். அவர் நல்ல கதைகள், வித்தியாசமான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து தனக்கான ஒரு பாதையில் நடிப்பு பயணத்தை தொடர்கிறார். தன்னை ஒரு ஹீரோவாகவோ நட்சத்திரமாகவோ காட்டிக் கொள்ளாமல், ஒரு திரைக்கலைஞனாக மட்டுமே அவர் தன்னை சினிமாவில் வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகர் பஹத் பாசில் பற்றி சீனியர் நடிகை ஊர்வசி கூறுகையில், தன்னை ஒரு நடிகராக சொல்லிக் கொள்ளும் தைரியம், தகுதியும் நிச்சயமாக பஹத் பாசிலுக்கு மட்டுமே இருக்கிறது. ஏனென்றால் மற்ற நடிகர்கள் தங்களை ஹீரோக்களாக, முன்னணி நட்சத்திரங்களாக மாற்றிக் கொள்வதற்காகவே போராடுகிறார்கள்.
தன்னை பெரிய நடிகராக ரசிகர் மத்தியில் காட்டிக் கொள்வதற்காக படங்களை, கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து அந்த பாதையில்தான் செல்கிறார்கள். ஆனால் நடிகர் பஹத் பாசிலை பொருத்தவரை அப்படிப்பட்ட ஒரு நடைமுறையை உடைத்து, மனதிற்கு எது சரி என்று படுகிறதோ அதை மட்டுமே செய்கிறார். அதனால்தான் அவர் நிச்சயமாக தனித்துவமான ஒரு நடிகர் என தாராளமாக சொல்ல முடியும் என்று பஹத் பாசிலை வெகுவாக பாராட்டி புகழ்ந்துள்ளார் ஊர்வசி.





