இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் படம் அரசன். இந்த படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரித்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடந்து முடிந்த நிலையில் சென்னையில் 2ம் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிவடைய உள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியா, அல்லது சென்னையா என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
ஏனெனில் அரசன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடந்த போது ரசிகர்கள் தொல்லை மிக அதிகமாக இருந்துள்ளது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான ரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து சிம்புவை காணவும் ஷூட்டிங்கை காணவும் அதிக ஆர்வம் காட்டுவதால் பெரிய சிரமம் ஏற்படுகிறது.
அதனால் கோவில்பட்டியை தவிர்த்துவிட்டு சென்னையில் படப்பிடிப்பை நடத்தலாம் என்றாலும் அதற்காக போடப்பட்ட செட் இன்னும் கோவில்பட்டியில் அப்படியே பிரிக்கப்படாமல் உள்ளது. அந்த செட்டை மீண்டும் சென்னையில் போட்டால் மிக அதிக செலவு தயாரிப்பாளருக்கு ஏற்படும் என்பதும் படக்குழுவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் அரசன் படம் குறித்த ஒரு லேட்டஸ்ட் தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அதாவது கதையின் தொடக்கத்தில் ஆண்ட்ரியாவின் மகனாக எஸ்டிஆர் நடித்திருக்கிறார். அவரது சிறு வயது காட்சிகளுக்குப் பிறகு அவர் கேங்ஸ்டர் ஆக உருவாக்கும் வகையில் கதை நகரும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் மூலம் வடசென்னை மற்றும் அரசன் திரைப்படங்களுக்கு இடையே சுவாரசியமான தொடர்பை இயக்குனர் வெற்றிமாறன் உருவாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி தலைப்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை.
நடிகர் சிம்புவுக்கு இளம் நாயகி ஆண்ட்ரியாக அம்மாவாக நடித்தாலும் அது சிறுவன் எஸ்டிஆர் கேரக்டருக்கு தான் நடித்துள்ளார். அந்த காட்சியில் வேறு ஒரு சிறுவன்தான் சிம்பு கேரக்டரில் வருவார். நேரடியாக சிம்புவுக்கு அம்மாவாக ஆண்ட்ரியாக நடிக்கவில்லை என்றும் ஒரு தகவல் உள்ளது. எனினும் வெற்றிமாறன் தரமான சம்பவத்தை அரசன் படத்தில் செய்திருக்கிறார் என்று தயாரிப்பாளர் தாணு குறிப்பிட்டு கூறியிருக்கிறார்.





