- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக உயர்ந்து விட்டாரா அனிருத்... அந்த ஒரு திரைப்படத்தில் ஏ...

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக உயர்ந்து விட்டாரா அனிருத்… அந்த ஒரு திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமானையும் முந்திவிட்டாரா… என்னங்க சொல்றீங்க…..

- Advertisement -

தனது முதல் திரைப்படத்தின் மூலம் உலகமே திரும்பிப் பார்க்கும் இசையமைப்பாளராக மாறியவர்தான் அனிருத். ரஜினிகாந்தின் உறவினரான அவர், அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தனது முதல் திரைப்படத்திலேயே, அத்தனை பாடல்களையும் சூப்பர் ஹிட் ஆக கொடுத்தார் அனிருத்.

அதுமட்டுமல்லாமல் அதில் தனுஷ் எழுத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகம் முழுவதும் ஹிட் ஆகியது. பல இடங்களிலும் அந்தப் பாடலை போட்டுவிட்டு ரசிகர்கள் நடனமாடிய காட்சிகள் வெளியாகின. இங்கிருந்து தனது வெற்றி பயணத்தை ஆரம்பித்த அனிருத், ஒவ்வொரு திரைப்படங்களுக்கும் அது மேலும் உயர்வதை பார்த்துக்கொண்டார்.

3 திரைப்படத்திற்குப் பிறகு எதிர்நீச்சல் படத்திலும் அவரது பாடல்கள் அனைத்தும் பம்பர் ஹிட் அடித்தன. விஜயுடன் அவர் கைகோர்த்த கத்தியில் சூப்பர் டூப்பர் இசையை கொடுத்தார். தொடர்ந்து ரஜினிகாந்த் கமல்ஹாசன் அஜித் குமார் என அவர் உச்ச நட்சத்திரங்களுக்கும் இசையமைத்து விட்டார்.

தற்போதும் நம்பர் ஒன் இசையமைப்பாளராக வலம் வருகிறார் அனிருத். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி திரைப்படங்களுக்கும் அவர் இசையமைத்து வருகிறார். அண்மையில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான தேவாரா திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்திருந்தார். அந்த திரைப்படம் சுமாராக இருந்தாலும் படத்தில் இடம்பெற்ற பின்னணி இசை மற்றும் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருந்தன.

இதன் காரணமாக பாராட்டப்பட்ட அனிருத் தற்போது தெலுங்கு உலகிலும் பிஸியான இசையமைப்பாளராக வலம் வர ஆரம்பித்திருக்கிறார். நானி நடிப்பில் அடுத்து உருவாகும் தி பாரடைஸ் திரைப்படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் தான். ஹிந்தியில், ஷாருக்கான் அட்லி கூட்டணியில் எடுக்கப்பட்ட ஜவான் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இதற்காக அவர் வாங்கிய சம்பளம் 10 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. ஹிந்தி திரை உலகில் ஏராளமான பாடல்களை இசையமைத்திருக்கும் ஏ ஆர் ரஹ்மானே, அங்கு எட்டு கோடி ரூபாய் வரைக்கும் தான் சம்பளம் வாங்கி இருப்பதாக சொல்கிறார்கள். அதனை முறியடித்திருக்கிறார் அனிருத். அதேசமயம் ஜவான் திரைப்படத்திற்கு பிறகு தமிழில் இசையமைத்த திரைப்படங்களுக்கு அவர் 8 கோடி ரூபாய் சம்பளம் பெற்று இருக்கிறார். விஷால் சேகர், கீரவாணி, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் 5 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

சற்று முன்