- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் இப்படி ஒரு விஷயம் நடப்பது இதுதான் முதல் முறை, நடிகர் பிரபுதேவா படத்துக்கு...

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு விஷயம் நடப்பது இதுதான் முதல் முறை, நடிகர் பிரபுதேவா படத்துக்கு ரசிகர்களால் கிடைத்த பெருமை – அட இது சூப்பரா இருக்குதே?

- Advertisement -

நடிகர் பிரபுதேவா நடன இயக்குநராக தமிழ் சினிமாவுக்குள் வந்து பின் நடிகராக மாறினார். ஒரு காலகட்டத்தில் இயக்குநராக அவதாரம் எடுத்து படங்களை இயக்கினார். போக்கிரி, வில்லு போன்ற விஜய் படங்களின் டைரக்டர் பிரபுதேவா தான். அக்‌ஷய்குமார் நடிப்பில் இந்தி படம் ஒன்றையும் இயக்கி உள்ளார் பிரபுதேவா.

டிரான்ஸ் இண்டியா மீடியா அண்ட் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்திருக்கிறார். இயக்குநர் ஷக்தி சிதம்பரம் இந்த படத்தை இயக்கி உள்ளார். இதற்கு முன்பு சார்லி சாப்ளின் என்ற படத்தில் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து எடுக்கப்பட்ட இந்த படம் தென்காசி, கொடைக்கானல் உள்ளிட்ட தென்பகுதி மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இந்த படத்தில் பெரும்பகுதி வரை பிரபுதேவா இறந்த சடலமாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் மட்டும் படத்தில் நாகேஷ் நடித்த அந்த கேரக்டரில் பிரபுதேவா இந்த படத்தில் படம் முழுக்க நடித்துள்ளார்.

பாடல்கள், சண்டை காட்சிகள் என பெரிய அளவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் மடோனா, யோகிபாபு, அபிராமி, யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி, எம் எஸ் பாஸ்கர், ரோபோ சங்கர், ஆடுகளம் நரேன் என பல முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். அஸ்வின் விநாயகமூர்த்தி இந்த படத்துக்கு இசை அமைத்துள்ளார்.

- Advertisement -

தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கிய அம்சமாக இந்த படத்தின் டைட்டிலை ரசிகர்களே தேர்வு செய்து வைத்துள்ளனர். அதாவது பிரபுதேவா நடித்த இந்த படத்துக்கு படக்குழு டைட்டில் வைக்கவில்லை. ரசிகர்களே தேர்வு செய்து வைக்கும்படி ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி ரசிகர்களின் விருப்பத்தின் படி அதிகளவில் அவர்கள் சொன்ன ஜாலியோ ஜிம்கானா என்ற இந்த படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜாலியோ ஜிம்கானா படத்தின் இயக்குநர் ஷக்தி சிதம்பரம் கூறுகையில், இந்த படத்தின் பெயரை ரசிகர்கள்தான் வைத்துள்ளனர். மக்களால் தேர்வு செய்யப்பட்ட டைட்டில் எப்படி மக்களிடம் ரீச் ஆனதோ அதுபோல் படமும் பெரிய அளவில் ரீச் ஆகும். படம் அந்தளவுக்கு ரிச் ஆக வந்துள்ளது, எனக் கூறியுள்ளார். தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு படத்துக்கு ரசிகர்களே டைட்டில் வைத்த பெருமை, பிரபுதேவா படத்துக்கு கிடைத்துள்ளது.

- Advertisement -

சற்று முன்