- Advertisement -
திரைப்பட இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் – காவ்யா மாதவன் திருமணம் கடந்த 11ம் தேதி கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடந்தது. திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சிக்கு அவர்கள் தயாரான நிலையில் அனிருத் சென்னையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் உணவு சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திரா பாணி சைவ உணவுகளுக்கு பெயர் பெற்ற நேஷனல் லாட்ஜ் தனக்கு பிடித்தமான உணவகம் என்று அனிருத் ஏற்கனவே ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். தற்போது அந்த ஓட்டலில் அவர் உணவு சாப்பிடும் வீடியோ கவனம் ஈர்த்துள்ளது.





