நடிகர் விஜயின் லியோ திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் பத்து நாட்களே உள்ளன. வாரிசு திரைப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணைந்தார். அதற்கான அறிவிப்பு வீடியோவாக வெளியிடப்பட்டு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அதுவும் யாருமே எதிர்பார்க்காத வகையில் லியோ எனும் டைட்டில்லை வைத்தார் லோகேஷ்.
அத்துடன் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக, அன்றே அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து காஷ்மீரில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற, இங்கிருந்து சென்னை மற்றும் தலக்கோணம் ஆகிய பகுதிகளிலும் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டது.
இதன் பிறகு விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, நா ரெடி தான் பாடலை படக்pகுழு வெளியிட்டது. விஜயின் சொந்த குரலில் உருவான இந்தப் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பிறகு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் கிளிம்ப்ஸ் வீடியோக்களும் வெளியிடப்பட்டன. சஞ்சய்தத் ஆண்டனி தாஸ் ஆகவும், அர்ஜுன் ஹரால்ட் தாஸ் ஆகவும் நடிக்கிறார்கள்.
இதன் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாடரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாடல் வெளியிடப்பட, ரசிகர்கள் படம் ஆரம்பித்த நாளிலிருந்து காத்திருந்த ட்ரெய்லரும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் அடுத்ததாக லியோவில் இருந்து மூன்றாவது பாடல் வெளியாக உள்ளது. படம் ரிலீஸ் ஆக இன்னும் 10 நாட்களில் இருப்பதால், இறுதி கட்டப் பணிகள் வேகம் எடுத்துள்ளன. வெளிநாடுகளில் லியோவிற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தைப் பற்றி பேசி இருந்த லோகேஷ் கனகராஜ், இது முழுக்க முழுக்க தனது பாணியிலான திரைப்படம் என்று கூறி இருந்தார்.
இந்த திரைப்படம் விஜய்க்கு புதியதாக இருந்தது என்றும், நிச்சயம் லியோவை அனைவரும் ரசிப்பார்கள் என்றும் தெரிவித்திருந்தார். இப்படியான சூழ்நிலையில், லியோ திரைப்படத்தை முழுசாக பார்த்துள்ள இசையமைப்பாளர் அனிருத் தனது விமர்சனத்தை தெரிவித்து இருக்கிறார். எக்ஸ் வலைத்தளத்தில் வெற்றிக் கோப்பை குறியுடன் லியோவுக்கு அவர் பயர் விட, அதை பலரும் லைக் செய்து வருகின்றனர். ஏற்கனவே ஜவான் மற்றும் ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் வெற்றிக் குறியிட இந்த திரைப்படங்கள் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை அள்ளின. இதனால் லியோவும் அந்த சாதனையைப் படைக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.





