- Advertisement -
Homeபொழுதுபோக்குஏ ஆர் முருகதாஸுடன் எஸ்.கே. இணையும் படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்... நடிகையும் ரெடியாகி டெஸ்ட் ஷூட்டிங்கும்...

ஏ ஆர் முருகதாஸுடன் எஸ்.கே. இணையும் படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்… நடிகையும் ரெடியாகி டெஸ்ட் ஷூட்டிங்கும் போயாச்சாம்…

- Advertisement -

நடிகர் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி இன்னும் மிகப்பெரிய இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட்டை கொடுத்தவர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். எஸ் ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அவர், வாலி திரைப்படத்தின் போது நடிகர் அஜித்திடம் கதை கூற, அவருக்கும் பிடித்துப் போனதால் உருவானதுதான் தீனா திரைப்படம்.

வித்தியாசமான ஹேர் ஸ்டைல், காதில் கடுக்கன், வாயில் வத்திக்குச்சி எனப் படுஜோராக காட்சியளித்த அஜித் குமார், அந்தப் படத்தில் இருந்துதான் தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். தீனா படத்தின் வெற்றி ஏ ஆர் முருகதாஸை வெவ்வேறு உயரங்களுக்கு எடுத்துச் சென்றது. 2001 ஆம் ஆண்டு தீனா வெளியாக, அடுத்த வருடமே விஜயகாந்த் வைத்து ரமணா திரைப்படத்தை இயக்கினார் முருகதாஸ்.

- Advertisement -

தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு என்னும் தரமான பஞ்ச் வசனங்களும், அழுத்தமான கதையும் இருந்ததால் ரமணா மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன்பிறகு, சூர்யாவை வைத்து கஜினி என்னும் பிளாக்பஸ்டர் ஹிட்டை கொடுத்தார் ஏ ஆர் முருகதாஸ். அது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் கொடுத்த இயக்குனர் என்றும் பலராலும் பாராட்டப்பட்டார்.

கஜினி திரைப்படத்தில் கிடைத்த வெற்றி அவரை பாலிவுட்டுக்கு அழைத்துச் செல்ல, அங்கு அமீர் கானை வைத்து கஜினியை ரீமேக் செய்து வெற்றி சாதனை படைத்தார். பிறகு ஏழாம் அறிவு படத்தை எடுத்த அவர், விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி என மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்து ரசிகர்களின் விருப்பமான இயக்குனராக வலம் வந்தார்.

- Advertisement -

இயக்குனராக மட்டுமின்றி, பல திரைப்படங்களுக்கு வசனங்களும், தயாரிப்பாளராகவும் ஏ ஆர் முருகதாஸ் விளங்கி இருக்கிறார். தொடர்ந்து வெற்றிப் பாதையில் சென்ற ஏ ஆர் முருகதாஸுக்கு சமீப காலமாக, எந்த ஒரு படங்களும் பெயர் சொல்லும் அளவுக்கு இருக்கவில்லை.

சர்கார், ஸ்பைடர், தர்பார் என அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்ததால் தவித்து வருகிறார். இந்த நிலையில் அவர் சிவகார்த்திகேயனுடன் சேர்வதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அதனை உறுதிப்படுத்தி இருக்கிறார் நடிகை மிருணால் தாகூர். இந்தப் படத்திற்கான ஒப்பந்தத்தில் அவர் கையொப்பமிட்ட நிலையில், தற்போது டெஸ்ட் ஷூட்டிங் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும், ராஜ்குமார் பெரியசாமி உடனான படப்பிடிப்பை முடித்ததும், சிவகார்த்திகேயன் முருகதாசுடன் இணைவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்