அதிவேகமாக மோட்டார் பைக்கை ஓட்டி அதனை யூ-டியூப் மூலம் பதிவிட்டு 2கே கிட்ஸ் மத்தியில் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள வெள்ளையங்காட்டைச் சேர்ந்த டிடிஎப் வாசன் 2கே கிட்ஸ் மத்தியில் பிரபலமான ஒரு யூடியூபர். தனது பைக் பயணங்களை வீடியோவாக எடுத்து அதனை பதிவிட்டு பேமஸான அவர் கிட்டத்தட்ட 40 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ்க்கு மேல் வைத்துள்ளார்.

எந்த அளவிற்கு இவர் சமூகவலைத்தளத்தில் பிரபலமாக இருக்கிறாரோ அந்த அளவிற்கு தன்னுடைய சர்ச்சையான செயல்களின் மூலம் போலீஸ் வழக்குகளையும் சந்தித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது அடுத்த கட்ட பயணமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார்.
அவர் நடிக்க உள்ள இந்த முதல் திரைப்படத்தின் பெயர் “மஞ்சள் வீரன்” என்று வைக்கப்பட்டு அவரது பிறந்த நாளில் “ஃபர்ஸ்ட் லுக்” போஸ்டரும் வெளியிடப்பட்டது. விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கும் இந்த மஞ்சள் வீரனை இயக்குனர் செல் அம் என்பவர் இயக்குகிறார். ஏற்கனவே திருவிக பூங்கா என்கிற திரைப்படத்தை இயக்கிய அவர் அடுத்ததாக டிடிஎஃப் வாசனை வைத்து இந்த மஞ்சள் வீரன் படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தினை “தி பட்ஜெட் பிலிம் கம்பெனி” நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்திற்கு அனிவி இசையமைக்கிறார். மேலும் இந்த படத்திற்காக டிடிஎஃப் வாசன் கோடியில் சம்பளம் வாங்கியதாகவும் இயக்குனர் செல் அம் அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். அதேபோன்று இந்த படத்தின் ஒரு பாடலை தமிழ் சினிமாவின் முன்னணி பாடகர் ஒருவர் பாடவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தில் டிடிஎஃப் வாசனின் அறிமுக பாடலை பிரபல இசையமைப்பாளர் அனிருத் பாட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனாலும் இதுகுறித்து படக்குழுவின் தரப்பிலோ. தயாரிப்பு நிறுவனம் தரப்பிலோ எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் இது உண்மையாக இருந்தால் டிடிஎஃப் வாசனின் 2k கிட்ஸ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.





