- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னய்யா இது ஆரம்பமே இத்தனை கூச்சல் குழப்பமா? - பிக்பாஸ் சீசன் 10ல் களை கட்டாத...

என்னய்யா இது ஆரம்பமே இத்தனை கூச்சல் குழப்பமா? – பிக்பாஸ் சீசன் 10ல் களை கட்டாத போட்டியாளர்கள் – தினசரி ஒரு மணி நேரமே பெரிய அளவுல கிளிக் ஆகலையே?

- Advertisement -

கடந்த 9 ஆண்டுகளை கடந்து இப்போது விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10 துவங்கி ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 6ம் தேதி மாலை துவங்கிய இந்த நிகழ்ச்சி 4 நாட்களை கடந்திருக்கிறது. இதில் 19 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர். இதில் உடல் நல பாதிப்பு காரணமாக பிளாக் பாண்டி வெளியேறி விட்டார்.

இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் 18 பேர் உள்ளனர். இதில் வினோத் குமார் ராகவ் சாந்தினி தமிழரசன் அசார் தன்யா உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே பரிச்சயமான முகங்களாக தெரிகின்றனர். மற்றபடி எல்லாருமே புதுமுக போட்டியாளர்களாக இருக்கின்றனர். அதிலும் முனியம்மா போன்றவர்கள் சிறிதும் அறிமுகம் இல்லாத போட்டியாளர்களாக உள்ளனர்.

- Advertisement -

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்ப காலத்தில் இரவு ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் வரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்தது. அதிலும் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை மிக கணிசமாக அதிகரித்தது.

அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்த நிலையில் 24 மணி நேரமும் லைவ்வில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கும் ரசிகர்கள் நல்ல ஆதரவும் வரவேற்பும் தந்த நிலையில் 3 மாதங்களுக்கு பல வீடுகளில் எப்போதுமே பிக்பாஸ் நிகழ்ச்சியே ஓடியது. வேறு சேனல்களே ஒளிபரப்பாகாத ஒரு சூழலும் உருவானது.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி துவங்கி 4 நாட்களை கடந்திருக்கிறது. இதில் சுவாரசியமான போட்டியாளர்களோ அடிக்கடி கலகலப்பாக இருக்கும் காட்சிகளோ எதுவுமே இல்லை. சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் சண்டை சச்சரவு செய்து கொள்ளும் போட்டியாளர்களால் பார்வையாளர்கள் கடுப்பாகின்றனர்.

கடந்த ஆண்டுகளை போல பிக்பாஸ் 24 மணி நேர லைவ் பார்க்கும் அளவுக்கு நிகழ்ச்சியில் எந்த சுவாரசியமும் இல்லை. 4 நாட்களிலேயே இந்த போட்டியாளர்கள் சலிப்படைய செய்துவிட்டனர். இன்னும் 100 நாட்களுக்கு இவர்களை எப்படி பார்த்து ரசிப்பது? இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி அவ்வளவு விறுவிறுப்பாக இல்லை. வேறு புதிய பிரபல போட்டியாளர்கள் வீட்டுக்குள் வந்தால் தான் ஆட்டம் சூடு பிடிக்கும் என்று பிக்பாஸ் ரசிகர்கள் புலம்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்