கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகளே இல்லாமல் இருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். கடந்தாண்டில் நடிகர் அஜீத்குமாரை வைத்து அவர் படம் இயக்குவதாக இந்த நிலையில், திடீரென அஜீத்குமார் திடீரென கதை பிடிக்கவில்லை என மறுத்துவிட்டார்.
இது விக்னேஷ் சிவனை மட்டுமின்றி அவரது மனைவி நயன்தாராவையும் பயங்கர ஏமாற்றத்தில் தள்ளியது. அவருடன் பில்லா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பதால் நயன்தாரா, அஜீத்குமாரின் போனில் பேசியும் அவர் சம்மதிக்கவில்லை.
அதன்பிறகு இப்போது, லவ்டுடே நாயகன், இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இந்த படத்தை லியோ படத்தை தயாரித்த எஸ்எஸ் லலித்குமார் தயாரிக்கிறார். படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 60 கோடி. இதில் பிரதீப் சம்பளம் ரூ. 20 கோடி, இயக்குநர் விக்னேஷ் சிவன் சம்பளம் ரூ. 10 கோடி என முடிவாகி உள்ளது.
பிரதீப் ரங்கநாதன் முதலில் இயக்கிய படம் கோமாளி. ஜெயம் ரவி நடித்த இந்த படமும் சராசரி வெற்றி படமாக இருந்தாலும் பெரிய அளவில் சினிமா ரசிகர்களிடம் பேசப்படவில்லை. ஆனால் காமெடி கலந்த படமாகவே இருந்தது. குறிப்பாக அந்த படத்திலும் மொபைல் போன், சமூக வலைதளங்களை மையப்படுத்திய காட்சிகளை வைத்திருப்பார்.
அதுபோல் லவ்டுடே படமும், காதலர்கள் இருவரும் மொபைல் போன்களை மாற்றிக்கொள்வதால் ஏற்படும் பிரச்னைகளே படத்தின் மையக் கருவாக இருக்கும். இந்த ஒரு படத்தை வெற்றியாக கொடுத்தவர் என்பதால், பிரதீப்பை மட்டுமே படம் எடுக்கலாமா என டைரக்டர் விக்னேஷ் சிவன் யோசித்து ஒரு பக்கா பிளான் செய்திருக்கிறார்.
அதன்படி இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோ என்றாலும், முக்கிய கேரக்டர்களில் எஸ்ஜே சூர்யா, டைரக்டர் மிஷ்கின் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். இருவருமே ரசிகர்களுக்கு மிக பிடித்தமான நடிகர்கள் என்பதால், எந்த விதத்திலும் படத்தின் வெயிட் குறையாமல் இருக்க, அவர்களுக்கான வெயிட்டான ரோல்களை இந்த படத்தில் தரப்போகிறார் விக்னேஷ் சிவன்.





