நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் படத்தில் கமலுடன் இணைந்து நடித்த சிம்பு, அடுத்ததாக 3 படங்களில் நடிக்க உள்ள அறிவிப்பை கடந்த 3ம் தேதி அவரது பிறந்த நாளில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இது அவரது 49 50 மற்றும் 51வது படங்களாக உள்ளன.
இதில் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சிம்புவின் 49வது படத்தை இயக்குகிறார். சிம்புவின் 50வது படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி டைரக்ட் செய்கிறார். இந்த படத்தை நடிகர் சிம்புவே சொந்தமாக தயாரிக்கிறார். இதற்கான அட்மன் சினி ஆர்ட்ஸ் என்ற புதிய சினிமா தயாரிப்பு நிறுவனத்தை சிம்புவே துவங்கியும் இருக்கிறார்.
இதற்கு முன்பு சிம்பு நடித்த சில படங்களை அவரது அப்பா டி ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரித்தது குறிப்பிடத்தக்கது. அதுவும் சிம்பு சினி ஆர்ட்ஸ் என்ற பெயரில்தான் உள்ளது. எனினும் இனிமேல் என்னுடைய சொந்த தயாரிப்பில் படங்களை தயாரிக்க விரும்புகிறேன் என இந்த புதிய பட தயாரிப்பு நிறுவனத்தை சிம்பு ஆரம்பித்திருக்கிறார்.
இந்நிலையில் சிம்பு நடிக்கும் 50வது படத்துக்கு அவரது நெருங்கிய நண்பர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். அதே போல் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் தனது 49வது படத்துக்கு இசையமைக்க நடிகர் சிம்பு, தனது நெருங்கிய நண்பரான இசையமைப்பாளர் அனிருத்திடம் பேசியிருக்கிறார். ஆனால் அவர் நேரமில்லை என்று கூறி இசையமைக்க மறுத்து விட்டார்.
அப்படி என்றால் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் 51வது படத்துக்கு இசையமைத்து கொடுங்கள் என்று சிம்பு அனிருத்திடம் கேட்டிருக்கிறார். அதற்கும் முடியாது, நேரமில்லை என்று அனிருத் மறுத்துவிட்டார். இரண்டு படங்களில் ஒரு படத்துக்காவது இசையமைத்து கொடுங்கள் என்று சிம்பு கேட்டும் 2 படங்களுக்குமே அனிருத் நோ சொன்னது எஸ்டி ஆர் ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளது.
அதே நேரத்தில் லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்துக்கு இசையமைக்க அனிருத் சமீபத்தில் கமிட் ஆகியிருக்கிறார். தனுஷ் படத்துக்கு இசையமைக்க நேரம் இருக்கிறது, ஆனால் சிம்பு நடிக்கும் படத்துக்கு இசையமைக்க அனிருத்துக்கு நேரமில்லையா, இதுதான் உண்மையான நட்பா என சிம்பு ரசிகர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.





