- Advertisement -
Homeபொழுதுபோக்குஏகே 64 படத்துக்கு அனிருத் இசையமைக்க காரணம் என்ன? டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் போட்ட திட்டம்...

ஏகே 64 படத்துக்கு அனிருத் இசையமைக்க காரணம் என்ன? டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் போட்ட திட்டம் இதுதானா? – வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

- Advertisement -

நடிகர் பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்த படம் போக்கிரி. இதில் நடிகர் வடிவேலு சங்கி மங்கி என்ற கேரக்டரில் கராத்தே மாஸ்டராக நடித்திருப்பார். இதில் ஒரு காட்சியில், எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணி பண்ணனும் என்று வடிவேலு பேசிய டயலாக் டிரண்ட் ஆகி, பெரும்பாலான மீம்ஸ்களில் வந்துக்கொண்டே இருக்கிறது.

அதுபோல கோலிவுட்டில் யாராக இருந்தாலும் எதையும் பிளான் பண்ணி பண்ணனும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அதன் காரணமாக தான் இப்போது நடிகர் அஜீத்குமார் அடுத்ததாக நடிக்க உள்ள ஏகே 64 படத்துக்கு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், இசையமைப்பாளராக அனிருத்தை கமிட் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குனராக அறிமுகமான படம் திரிஷா இல்லேன்னா நயன்தாரா. இந்த படத்தில் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் தான் கதாநாயகனாக நடித்திருந்தார். அதுதவிர குட் பேட் அக்லி படம் உள்பட ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ட் செய்த படங்களுக்கு இசையமைத்தவரும் ஜீவி பிரகாஷ்குமார்தான்.

அப்படி தனக்கு வாய்ப்பளித்த ஜீவி பிரகாஷ்குமாரை தவிர்த்து விட்டு, ஏகே 64 படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத்தை, ஆதிக் ரவிச்சந்திரன் கமிட் செய்தது ஏன் என்பதற்கான பதில் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது தமிழ் சினிமாவில் இயக்குனராக உள்ள அனைவருக்குமே உள்ள ஆசை, சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் பண்ண வேண்டும் என்பதுதான்.

- Advertisement -

இப்போதைக்கு அதற்கான எளிய வழி யார் என்றால் அதற்கு அனிருத் தான். ஏனெனில் ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு காரணமாக இருந்தது இயக்குனர் நெல்சனை விட இசையமைத்த அனிருத் தான் என்று ரஜினி பகிரங்கமாக மேடையிலேயே சொல்லி விட்டார், கூலி பட இசை வெளியீட்டு விழாவிலும் அனிருத்தை எவ்வளவு வேணாலும் பாராட்டலாம் என்றும் பேசியிருக்கிறார்.

ரஜினியிடம் மிக எளிதில் அணுகி பேசும் வாய்ப்புள்ளவர் அனிருத். குடும்பத்தில் நெருங்கிய உறவினராக இருக்கிறார். கூலி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்க அனிருத்தும் ஒரு காரணம் என்று லோகேஷ் கனகராஜூம் கூறியிக்கிறார். அதனால்தான் அஜீத்குமார் நடிக்கும் 64 படத்தை தொடர்ந்து ரஜினி படத்தை இயக்கும் ஆசையில்தான், திட்டமிட்டே அந்த படத்துக்கு அனிருத்தை டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் கமிட் செய்திருப்பதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்