- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய், திரிஷா நட்பில் இருக்கும் நெருக்கம்… வெளிப்படையாக தெரிய விரும்பும் தளபதி - உண்மை காரணம்...

விஜய், திரிஷா நட்பில் இருக்கும் நெருக்கம்… வெளிப்படையாக தெரிய விரும்பும் தளபதி – உண்மை காரணம் இதுதானா? சீக்ரெட்டை ஓபன் செய்த பிரபலம்!

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். அவர் தற்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது அரசியல் கட்சி பணிகளை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளார். வருகிற 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தலில் தவெக ஆட்சியை பிடிப்பதை லட்சியமாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய் 2 தினங்களுக்கு முன் கோவாவில் நடைபெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் திருமணத்துக்கு நேரில் சென்றார். பைரவா, சர்கார் ஆகிய படங்களில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். அந்த நட்பின் காரணமாக, தன் மீது பேரன்பு கொண்ட ரசிகையாக அவர் இருப்பதால் அந்த திருமண விழாவில் விஜய் பங்கேற்றார்.

- Advertisement -

ஆனால் சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோவா சென்ற விஜயுடன் நடிகை திரிஷாவும் ஒரே விமானத்தில் பயணித்துள்ளார். அதே போல் விஜய் மற்றும் திரிஷாவின் உதவியாளர்கள் 4 பேரும் அவர்களுடன் அதே விமானத்தில் கோவா சென்றுள்ளனர். பிறகு விஜய், திரிஷா இருவருமே கீர்த்தி சுரேஷ் திருமண விழாவில் பங்கேற்றனர்.

நடிகர் விஜய், திரிஷா இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். கில்லி, ஆதி, குருவி, திருப்பாச்சி, லியோ ஆகிய படங்களில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். அதே போல் தி கோட் படத்திலும் மட்ட என்ற ஐட்டம் பாடலுக்கு விஜயுடன் திரிஷா குத்தாட்டமும் போட்டிருந்தார். லியோ படத்தில் விஜய், திரிஷா உதட்டு முத்தக்காட்சியிலும் நடித்திருந்தனர்.

- Advertisement -

திரிஷாவுடன் விஜய் படங்களில் நடிப்பது, அவருடன் நட்பு கொண்டிருப்பது நடிகர் விஜய் மனைவி சங்கீதாவுக்கு பிடிக்கவில்லை என்றும், அதனால்தான் அவர் லண்டனில் பல மாதங்களாக தன் மகளுடன் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் விஜய் கட்சி நிகழ்ச்சிகளிலும், சினிமா நிகழ்ச்சிகளிலும் சங்கீதா தொடர்ந்து பங்கேற்க மறுப்பதாகவும் தகவல்கள் உள்ளன.

இந்த சூழலில், மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறியிருப்பதாவது, நெருப்பு இல்லாமல் புகையாது என்பது போல், தனக்கும் திரிஷாவுக்கும் உள்ள உறவு வெளிப்படையாக தெரியட்டும் என விஜய் விரும்புவது தெரிகிறது. இதுபோன்ற விஷயங்கள் வெளியே தெரிய வருவதால், தங்களது உறவை சமூகம் புரிந்துக்கொள்ளட்டும் என்று விஜய் நினைப்பது உறுதியாகிறது என்று கூறியிருக்கிறார். விரைவில் திரிஷாவுக்கு தனது கட்சியில் மகளிரணியில் முக்கிய பொறுப்பை விஜய் வழங்கி, ஜெயலலிதாவைப் போல் அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் தருவார் என்றும் வேகமாக தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்