- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ பட நடிகரின் ட்ரிக்.. ஆண்டனி டீசரை எப்போ வெளியிடுறார் பாருங்க.. செம மூளை ப்பா..

லியோ பட நடிகரின் ட்ரிக்.. ஆண்டனி டீசரை எப்போ வெளியிடுறார் பாருங்க.. செம மூளை ப்பா..

- Advertisement -

மலையாள திரையுலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் ஜோஜு ஜார்ஜ். 1995ஆம் ஆண்டிலிருந்து நடித்து வரும் அவர் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முக்கியமாக சிறந்த நடிப்புக்காக தேசிய விருதெல்லாம் பெற்றிருக்கிறார். மலையாளம் மட்டுமின்றி தமிழ் மொழியிலும் அவர் நடித்திருக்கிறார். அந்த வகையில் அவர் ஜகமே தந்திரம் படத்தின் மூலம்தான் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு பஃபூன், புத்தம் புது காலை விடியாதா உள்லிட்ட படங்களில் நடித்தார். தற்போது விஜய் நடித்திருக்கும் லியோ படத்திலும் நடித்திருக்கிறார்.

தமிழில் வெகு சில படங்களில் நடித்து வந்தாலும் மலையாளத்தில் பிஸியான நடிகர் ஜோஜு ஜார்ஜ். அந்த வகையில் அவர் தற்போது கேரள திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநர் ஜோஷியின் இயக்கத்தில் ஆண்டனி படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை ஐன்ஸ்டின் சாக் பால், சுஷில்குமார், நிதின்குமார், ரஜத் அகர்வால் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கின்றனர். ஏற்கனவே ஜோஜு ஜார்ஜும், ஜோஷியும் இணைந்த பொரிஞ்சு மரியம் ஜோஸ் படம் சிறந்த படம் என்ற பெயரை பெற்றதால் இந்த கூட்டணி இணைந்திருக்கும் ஆண்டனி படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

- Advertisement -

இந்தப் படத்தில் ஜோஜு ஜார்ஜுடன் இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகளான கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்திருக்கிறார். மேலும் செம்பன் வினோத், நைலா உஷால் உள்ளிட்டோரும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. படமானது பான் இந்தியா படமாக நவம்பர் 23ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில்தான் அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேறபை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதன்படி தமிழில் ஜோஜு ஜார்ஜ் நடித்திருக்கும் லியோ படம் வெளியாகும் தினமான அக்டோபர் 19ஆம் தேதி ஆண்டனி படத்தின் டீசர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஒரு கிராமத்தில் வாழும் தனது நண்பர்களுடன் வாழ்ந்துவரும் ஆண்டனி (ஜோஜு ஜார்ஜ்) எதிர்பாராத விதமாக செய்யும் ஒரு கொலையும் அதற்கு பிறகு நடக்கும் சம்பவங்களும்தான் கதை என்று கூறப்படுகிறது. த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படம் கண்டிப்பாக மெகா ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

படம் குறித்து பேசிய ஜோஜு ஜார்ஜ், “ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டதில் மகிழ்ச்சியடைகிறேன். நானும் ஜோஷியும் இதற்கு முன்னதாக இணைந்த பொரிஞ்சு மரியம் ஜோஸ் எனக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது மட்டுமின்றி சினிமா வாழ்க்கையில் மைல் கல்லாகவும் அமைந்தது. கண்டிப்பாக இந்த படமும் உங்களை ஏமாற்றாது” என்றார்.

அதேபோல் ஜோஷி இயக்கத்தில் முதன்முறையாக நடிக்கும் கல்யாணி ப்ரியதர்ஷன் படம் குறித்து பேசுகையில், “இந்தக் கதைக்களம் வழக்கமானது இல்லை. தனித்துவமானது. குறிப்பாக நம்மை இணைக்கக்கூடிய உணர்ச்சிகள் இந்தப் படத்தில் நிரம்பியிருக்கிறது. இதுவரை நான் நடித்த கேரக்டர்களைவிடவும் இந்தப் படத்தின் கேரக்டர் நேர்மாறாக இருக்கும்.

இந்தக் கதையை ஜோஷி சார் சொல்லி முடித்ததும் இதுபோன்ற ஒரு த்ரில்லர் ப்ராஜெக்ட்டை நான் கேட்டதில்லை என்று தோன்றியது. இதில் பணியாற்றியிருப்பது பெருமையாக இருக்கிறது” என்றார். ஆண்டனி படத்துக்கு ஜேக்ஸ் பிஜோயின் இசையாமிக்கிறார். ரெனதீவ் ஒளிப்பதிவு செய்கிய்றார். எடிட்டிங் பணியை ஷ்யாம் கவனித்துக்கொள்கிறார்.

- Advertisement -

சற்று முன்