நடிகர் தனுஷ் இப்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறியிருக்கிறார். ப பாண்டி ராயன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவான 4வது படம் இட்லி கடை. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார்.
இட்லி கடை படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாகவும் நித்யா மேனன் நாயகியாகவும் நடித்திருக்கின்றனர். திருச்சிற்றம்பலம் படத்துக்கு பிறகு 2வது முறையாக இட்லி கடை படத்தில் மீண்டும் இந்த ஜோடி இணைந்திருக்கிறது. ராஜ்கிரண் சத்யராஜ் பார்த்திபன் அருண்விஜய் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் காணப்படுகிறது.
இட்லி கடை படம் வருகிற அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்கு முன்னதாக இட்லி கடை படத்தின் டிரெய்லர் நேற்று கோவையில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது. இதில் படத்தின் இயக்குனர் நடிகர் தனுஷ் நடிகர்கள் பார்த்திபன் சத்யராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
இந்நிலையில் இட்லி கடை படத்தின் கதை கோவையை சேர்ந்த பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கை கதை என்ற ஒரு தகவல் பரவியது. இப்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்த 2 வெற்றிப் படங்களின் கதையை அப்படியே உல்டா செய்து இயக்குனர் தனுஷ் இட்லி கடை வைத்திருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த 36 ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் மிஸ்டர் பாரத். இதில் ரஜினிகாந்த் சத்யராஜ் அம்பிகா சாரதா எஸ்வி சேகர் விசு ரகுவரன் உள்ளிட்டோர் நடித்திருப்பர். அப்பா மகன் இருவருக்கும் இடையிலான போட்டிதான் படத்தின் கதை. அதில் கன்ஸ்ட்ரக்சன் தொழிலதிபர் சத்யராஜை. அவரது மகன் ரஜினி சவால் விட்டு தோற்கடிப்பதே கதைக்களம்.
இட்லி கடை படத்தில் கன்ஸ்டக்ரசன் தொழிலுக்கு பதிலாக இட்லி கடை மற்றும் பெரிய ஸ்டார் ஓட்டல் இடையிலான மோதலாக கதையை உருவாக்கி உள்ளார் இயக்குனர் தனுஷ். இதற்கிடையே அண்ணாமலை படத்தையும் அப்படியே உள்ளே கலந்துவிட்டு அருண் விஜயை பணக்கார வில்லனாக கதைக்குள் கோர்த்து விட்டிருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மாஜி மாமனார் ரஜினி நடித்த 2 படங்களையே இயக்குனர் தனுஷ் உல்டாவாக்கி இட்லி கடை வைத்திருக்கிறார் என்று இணையத்தில் தகவல் பரவி வருகிறது.





