- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது சூர்யாவோட அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா... நடிகருடன் பாலிவுட் ரீமேக்கில் இருந்த நட்சத்திரமும்...

என்னது சூர்யாவோட அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா… நடிகருடன் பாலிவுட் ரீமேக்கில் இருந்த நட்சத்திரமும் இணைய போவதாக செய்தி…

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் சூர்யா. தனது அசாத்திய நடிப்புத் திறமையால் பல உச்சங்களைத் தொட்ட சூர்யா, தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். ஆனால் இந்த இடத்தை பிடிப்பதற்கு அவர் எடுத்த முயற்சிகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல.

 

- Advertisement -

நேருக்கு நேர் திரைப்படத்தின் முதலில் விஜய்யும் அஜித்தும் தான் நடிப்பதாக இருந்தது. இதற்கான சூட்டிங் நடைபெற்ற சூழலில், திடீரென அஜித் படத்திலிருந்து விலகினார். அந்த கதாபாத்திரத்திற்கு தான் கடைசியில் வந்தார் சூர்யா. சொல்லப்போனால் அங்கிருந்து தான் அவரது திரையுலக பயணம் தொடங்க ஆரம்பித்தது.

 

- Advertisement -

தொடக்கத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த அவருக்கு, பெரிய பிளாட்பார்மை ஏற்படுத்திக் கொடுத்தவர் இயக்குனர் பாலா. தனது நந்தா திரைப்படத்தின் மூலம், சூர்யாவின் நடிப்பு திறமையை உலகறிய வைத்தார். தொடர்ந்து பிதாமகன் திரைப்படத்திலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்க, அதனை சிறப்பாக செய்து முடித்தார் சூர்யா.

 

பிறகு கௌதம் மேனனுடன் இணைந்து காக்க காக்க உள்ளிட்ட திரைப்படங்களை கொடுத்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்ற சூர்யா, தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இது வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

 

சூர்யா – ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் கஜினி மற்றும் ஏழாம் அறிவு என இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. இதில் கஜினி திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை அனைத்தையும் மறக்கும் கதாநாயகன், அப்படி ஒரு குறை இருந்தும் எதிராளிகளை திட்டம் போட்டு பழிவாங்கும் செயல் என ஒவ்வொரு விஷயத்தையும் மிக சுவாரஸ்யமாக எடுத்திருந்தார் முருகதாஸ்.

 

இதன் பாலிவுட் ரீமேக்கில் அமீர்கான் நடித்திருக்க அதுவும் மிகப் பெரிய வெற்றியை ருசித்தது. இந்த நிலையில் தற்போது கஜினி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மிகப்பெரிய சுவாரசியம் என்னவென்றால் அதில் சூர்யாவும் அமீர் கானும் இணைந்து நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்