- Advertisement -
Homeபொழுதுபோக்குஏ ஆர் முருகதாஸுடன் எஸ்கே இணைந்திருக்கும் திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கே நடக்கப்போகுது தெரியுமா......

ஏ ஆர் முருகதாஸுடன் எஸ்கே இணைந்திருக்கும் திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கே நடக்கப்போகுது தெரியுமா… இது பயங்கரமான ஊராச்சேப்பா…

- Advertisement -

சிவகார்த்திகேயன் தற்போது தனது 23 வது திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதனை, நம்பர் ஒன் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் கதை முதலில் விஜய்க்கு எழுதப்பட்டதாக கூறப்படுகிறது. விஜயும் அதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் ஷூட்டிங் பணிகளும் தொடங்குவதற்கு ஆயத்தமானதாம்.

 

- Advertisement -

ஆனால் கடைசி நேரத்தில், விஜய் படத்திலிருந்து விலக சிவகார்த்திகேயனிடம் இந்த கதையை கொடுத்து முருகதாஸ் ஓகே வாங்கியதாக தெரிகிறது. இதனை தெலுங்கில் முன்னணி நிறுவனமான லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வழக்கம்போல அனிருத் இதற்கு இசையமைக்கிறார்.

 

- Advertisement -

இதில், துப்பாக்கி பட வில்லன் வித் யூத் நடிக்கிறார். இதுபோக விக்ராந்த், பிஜு மேனன் உள்ளிட்டோரும் வருகின்றனர். கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். இந்த படத்திற்காக நீண்ட தாடியுடன் காட்சியளிக்கிறார் சிவகார்த்திகேயன்.

 

படத்தில் அவர் மனம் நலம் குன்றிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்ல அவர் கல்லூரி இளைஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் பேசப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு பிறகு முருகதாஸ், பாலிவுட் நடிகர் சல்மான் கான் உடன் இணைய இருக்கிறார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா நடிக்கிறார்.

 

அந்தப் படம் 2025 ஆம் ஆண்டு ரம்ஜானில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது சிவகார்த்திகேயன் பட வேலைகளை தீவிரமாக்கி இருக்கிறார் ஏ ஆர் முருகதாஸ். இதன் பெரும்பாலான காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்ட நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தூத்துக்குடிக்கு செல்கிறது. அங்கு முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம்.

 

அனேகமாக ஆகஸ்ட் மாதத்திற்குள் இதன் சூட்டிங் பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு தனது 24 வது திரைப்படத்திற்காக, டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் சிவகார்த்திகேயன் இணைகிறார். அதன்பிறகு வெங்கட் பிரபு உடன் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் 25வது காவியமாக உருவாகிறது. சிவகார்த்திகேயன் தற்போது நடித்து முடித்திருக்கும் அமரன் திரைப்படம், ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

 

- Advertisement -

சற்று முன்