- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் பிளாப் ஆனது ஏன்? அவர் வந்த பிறகு கதையின் போக்கே...

ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் பிளாப் ஆனது ஏன்? அவர் வந்த பிறகு கதையின் போக்கே மாறிவிட்டது – ஓபனாக பேசிய இயக்குனர் ஏஆர் முருகதாஸ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ். தீனா என்ற படம் மூலம் இயக்குனராக ஏஆர் முருகதாஸ் அறிமுகமானார். இந்த படத்தில் அஜீத்குமார் சுரேஷ்கோபி லைலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. இந்த படத்தில் நடித்த பிறகுதான் அஜீத்குமாரை ரசிகர்கள் தல என அழைக்க ஆரம்பித்தனர்.

பிறகு கஜினி ரமணா கத்தி துப்பாக்கி சர்கார் ஏழாம் அறிவு தர்பார் உள்ளிட்ட பல படங்களை ஏஆர் முருகதாஸ் இயக்கினார். இதில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் 2000ம் ஆண்டில் வெளியானது.

- Advertisement -

இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா யோகிபாபு நிவேதா தாமஸ் சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் கமிஷனராக நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் தர்பார் படத்தை தொடர்ந்து இந்தியில் நடிகர் சல்மான்கான் நடித்த ஏஆர் முருகதாஸ் இயக்கிய சிக்கந்தர் படமும் சரியாக போகவில்லை. இப்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கி உள்ளார்/ சமீபத்தில் மதராஸி படத்தின் பிரமோசனுக்காக நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தர்பார் படத்தின் தோல்வி குறித்து பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ஏஆர் முருகதாஸ் கூறியதாவது, தர்பார் படத்தை இன்னும் பிரம்மாண்டமாக கவனத்துடன் இயக்கியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த கதையில் நிறைய பயணங்கள் இருந்தது. அது எல்லாம் வேண்டாம் என்று சுருக்கி எடுத்தேன். ரஜினியை வைத்து நிஜமான இடங்களில் படமாக்க வேண்டாம் எனவும் கருதினேன்.

அப்பா மகள் கதையாக தான் முதலில் தர்பார் கதை இருந்தது. நயன்தாரா படத்துக்குள் வந்தவுடன் அந்த கதையின் போக்கு மாறியது. மும்பை பின்னணி, நடிகர்கள் உள்ளிட்டவற்றை மாற்றியிருந்தால் இன்னும் நன்றாக வந்து இருக்குமோ எனத் தோன்றியது. குறுகிய காலத்தில் ரொம்ப சந்தோஷத்தில் நான் இயக்கிய படம். இந்த படத்தின் கதையை மிக சீக்கிரம் எழுதியதும் தோல்விக்கு காரணமாக இருக்கலாம் என்று ஏஆர் முருகதாஸ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்