- Advertisement -
Homeபொழுதுபோக்குஇசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைப்பாளர் அனிருத்துக்கு சொன்ன அட்வைஸ், கடைசியில் இப்படி ஒரு வேண்டுகோளும் வெச்சுட்டாரே?

இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைப்பாளர் அனிருத்துக்கு சொன்ன அட்வைஸ், கடைசியில் இப்படி ஒரு வேண்டுகோளும் வெச்சுட்டாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏஆர் ரகுமான். மணிரத்னம் இயக்கத்தில் அறிமுகமான ஏஆர் ரகுமான், இப்போது வரை மணிரத்னம் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஏஆர் ரகுமான் இசைக்கு இதுவரை 7 முறை தேசிய விருது கிடைத்துள்ளது. ஆஸ்கர் விருதுகளையும் 2 முறை வென்றிருக்கிறார்.

ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான படம் காதலிக்க நேரமில்லை. இந்த படத்தில் ஜெயம் ரவி நாயகனாகவும் நித்யாமேனன் நாயகியாகவும் நடித்துள்ளனர். படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் பாடகர் மனோ யோகி பாபு லால் வினய் லட்சுமி ராமகிருஷ்ணன் டிஜே பானு ஜான் கோகேன் வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

- Advertisement -

காதலிக்க நேரமில்லை படம் வருகிற பொங்கலுக்கு 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஜெயம் ரவி நித்யாமேனன் கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் கலந்துகொண்ட படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் பேசியதாவது, அனிருத் நன்றாக இசையமைக்கிறார். எவ்வளவு பெரிய பெரிய படங்களுக்கு அவர் ஹிட் கொடுக்கிறார். 10 ஆயிரம் கம்போஸர்கள் இருக்கிறார்கள். அதில் நிலைத்து நிற்பது என்றால் திறமை இல்லாமல் நடக்காது.

- Advertisement -

அதெல்லாம் செய்துவிட்டு தைரியமாக நின்று சொல்கிறார். தலைவன் தலைவன்தான் தொண்டன் தொண்டன் தான் என்று சொல்லும் அந்த பணிவு கண்டிப்பாக வேண்டும். உங்களுடைய வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துகள்.

உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நீங்கள் கிளாசிக்கல் இசை படித்து விட்டு நிறைய பாடல்கள் பண்ண வேண்டும். அதை நீங்கள் செய்தால் இளம் தலைமுறையினருக்கு அந்த இசை போய் சேரும் என்றும் ஏஆர் ரகுமான் அறிவுறுத்தி இருக்கிறார். ஏஆர் ரகுமான் பேசிய அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்