- Advertisement -
Homeபொழுதுபோக்குநாட்டில் சோற்றுக்கே வழியில்லை, இவர்கள் படம் எடுக்கிறார்களா? - ஆஸ்கார் விருது தேர்வுக்குழு குறித்து பகிரங்கமாக...

நாட்டில் சோற்றுக்கே வழியில்லை, இவர்கள் படம் எடுக்கிறார்களா? – ஆஸ்கார் விருது தேர்வுக்குழு குறித்து பகிரங்கமாக விமர்சித்த இசைப்புயல் ஏஆர் ரகுமான்!

- Advertisement -

இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இசை புயல் ஏ ஆர் ரகுமான். கடந்த 1992ம் ஆண்டில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தமிழில் கொடுத்தார்.

தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பல மொழி படங்களுக்கு இசையமைத்து இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக இசைப் புயலாக வலம் வருகிறார். குறிப்பாக ஏ ஆர் ரகுமான் இசையில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் என்ற திரைப்படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை ஏ ஆர் ரகுமான் வென்றார்.

- Advertisement -

இதனால் இந்திய சினிமாவை தாண்டி உலக அளவில் கவனிக்கப்படும் ஒரு முக்கியமான இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் இமேஜ் உயர்ந்தது. மேலும் மில்லியன் டாலர் ஆர்ம், கப்பிள்ஸ் ரிட்ரீட் மற்றும் 127 ஹவர்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் மற்றும் சர்வதேச திரைப்படங்களுக்கும் ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஏ ஆர் ரகுமான் இசையில் இயக்குனர் மணிரத்னம் நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள தக்லைஃப் திரைப்படம் வருகிற ஜூன் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானிடம் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் இந்திய சினிமாக்கள் கையாளப்படும் விதம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

- Advertisement -

அப்போது இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் கூறியதாவது, ஆஸ்கார் விருது வழங்கும் தேர்வுக்குழுவில் இருப்பவர்கள் இந்தியா பாகிஸ்தான் வங்காளதேசம் இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து வரும் படங்கள் என்றாலே அவற்றை நிற வெறி பார்வையில் தான் பார்ப்பார்கள். இவர்கள் நாட்டில் சோற்றுக்கே வழியில்லை. கழிவறைகள் இல்லை. இவர்களெல்லாம் படத்தை எடுத்துக்கொண்டு இங்கே வந்து விட்டார்களா? என்கிற எண்ணம் அவர்களிடம் நிச்சயம் இருக்கும்.

அதையும் மீறி நாம் படம் எடுக்கும் போதுதான் எப்படி இதைச் செய்தீர்கள் என்கிற உணர்வை அவர்களுக்குள் விதைக்க முடியும். அப்படி ஒரு தருணத்தை ஏற்படுத்தியதுதான் ஆர்ஆர்ஆர் படம். அந்த படத்தின் இசை அமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கார் விருது வழங்கும் போது நானும் அங்கு தான் இருந்தேன் என்று இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் கூறியிருக்கிறார். ஆஸ்கார் விருது வழங்கும் தேர்வுக் குழுவில் இருப்பவர்கள் நிறவெறி பார்வை கொண்டவர்கள் என்று ஏ ஆர் ரகுமான் பகிரங்கமாக விமர்சித்திருப்பது இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்